2023 ஆம் ஆண்டு இந்திய சந்தையில் விற்பனைக்கு வெளியான எஸ்யூவி மாடல்களில் புதிதாக விற்பனைக்கு வந்த சில மாடல்களை தவிர பல்வேறு ஃபேஸ்லிஃப்ட் மற்றும் ஸ்பெஷல் எடிசன் விற்பனைக்கு வந்தாலும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட மாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளது.
மேம்படுத்தப்பட்ட மாடல்களில் கியா செல்டோஸ், டாடா மோட்டார்ஸ் நெக்ஸான், ஹாரியர் மற்றும் சஃபாரி எஸ்யூவி போன்றவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. எம்பிவி சந்தையில் மாருதி எர்டிகா ரீபேட்ஜ் மாடலாக டொயோட்டா ரூமியன் வெளியிடப்பட்டது.
மேலும் படிக்க – 2023 ஆம் ஆண்டு வந்த எலக்ட்ரிக் கார்கள்
Honda Elevate
ஹோண்டா நிறுவனத்துக்கு மிகப்பெரிய சந்தை மதிப்பை ஏற்படுத்தி தந்துள்ள எலிவேட் எஸ்யூவி மிக கடுமையான போட்டியாளர்கள் நிறைந்துள்ள சந்தையில் விற்பனைக்கு வெளியாகியுள்ளது. விற்பனைக்கு வந்த 100 நாட்களில் 20,000க்கு மேற்பட்ட எண்ணிக்கையில் டெலிவரி வழங்கப்பட்டுள்ளது.
1.5-லிட்டர், நான்கு சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 4300rpm-ல் 121hp பவர், மற்றும் 145Nm டார்க் வெளிப்படுத்தும். இந்த எஸ்யூவியில் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் CVT கியர்பாக்ஸ் என இரண்டு விதமான ஆப்ஷனை கிடைக்கின்றது.
2023 ஆம் ஆண்டு ஹோண்டா எலிவேட் எஸ்யூவி ரூ.11 லட்சம் – ரூ.16 லட்சத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Hyundai Exter
துவக்கநிலை சந்தையில் வெளியிடப்பட்ட ஹூண்டாய் எக்ஸ்டர் எஸ்யூவி டாடா பஞ்ச் மாடலை எதிர்கொண்டு வரும் நிலையில் மாதந்தோறும் 8,000 அதிகமான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றது.
6000rpm-ல் 81 hp பவர், மற்றும் 113.8 Nm டார்க் 4000rpm-ல் வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி என இரண்டிலும். சிஎன்ஜி ஆப்ஷனில் 6000rpm-ல் 69 hp பவர் மற்றும் 4000rpm-ல் 95.2Nm டார்க் வழங்கும். 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் வரவுள்ளது.
2023 ஆம் ஆண்டு ஹூண்டாய் எக்ஸ்டர் அறிமுகத்தின் பொழுது விலை ரூ.6 லட்சம் முதல் ரூ.9.31 லட்சம் வரை அறிவிக்கப்பட்டது.
Maruti Suzuki Jimny
லைஃப்ஸ்டைல் எஸ்யூவி பிரிவில் மிகவும் எதிர்பார்ப்புகளுடன் மாருதி சுசூகி அறிமுகம் செய்த ஜிம்னி ஆரம்ப கட்டத்தில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தாலும் அதிகப்படியான விலை காரணமாக போதுமான வரவேற்பினை பெற இயலாமல் ரூ.2 லட்சம் ரூபாய் வரை தற்பொழுது தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
1.5-லிட்டர் K15B பெட்ரோல் என்ஜின் மைல்டு ஹைபிரிட் வசதி கொண்டதாக பொருத்தப்பட்டு, 6000 RPM-ல் அதிகபட்ச பவர் 105 hp மற்றும் 134 Nm டார்க் 4000 RPM-ல் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் என இருவிதமான கியர்பாக்ஸ் பெற்றிருக்கின்றது. இந்த காரில் சுசூகி AllGrip Pro 4WD சிஸ்டத்துடன் மேனுவல் டிரான்ஸ்ஃபர் கேஸ் மற்றும் ‘2WD-high’, ‘4WD-high’ மற்றும் ‘4WD-low’ மோடுகளுடன் குறைந்த ரேஞ்ச் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.
2023ல் அறிமுகம் செய்யப்பட்ட மாருதி சுசூகி ஜிம்னி விலை ரூ.12.74 லட்சம் முதல் ரூ.15.05 லட்சம் வரை அறிவிக்கப்பட்டது.
Maruti Suzuki Fronx
பலேனோ அடிப்படையில் கிராஸ்ஓவர் மாருதி சுசூகி ஃபிரான்க்ஸ் கார் அமோக வரவேற்பினை மாருதிக்கு 2023 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மாடல்களில் பெற்று தந்தது.
1.2 லிட்டர் மைல்டு ஹைபிரிட் சிஸ்டத்தை பெற்ற பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 90 hp குதிரைத்திறன் மற்றும் 113 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனை பொறுத்தவரை 5 வேக மேனுவல் மற்றும் 5 வேக ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் என இரண்டையும் பெறுகின்றது.
கூடுதல் பவரை வெளிப்படுத்தும் 1.0-லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் (மைல்டு ஹைபிரிட்) 100 PS பவர் மற்றும் 148 Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் ஐந்து வேக மேனுவல் மற்றும் ஆறு வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெறும்.
மாருதி ஃபிரான்க்ஸ் ரூ.7.47 லட்சம் முதல் துவங்கி ரூ.13.14 லட்சத்தில் வெளிவந்தது.
Citroen C3 Aircross
5+2 இருக்கை அமைப்பினை பெற்ற சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் எஸ்யூவி மிக கடுமையான போட்டியாளர்களை எதிர்கொள்ளும் வகையில் வெளியிடப்பட்ட மிகவும் குறைந்த விலை மாடலாகும்.
110PS பவர் மற்றும் 190Nm டார்க் வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
சி3 ஏர்கிராஸ் எஸ்யூவி காரில் மொத்தமாக யூ, பிளஸ் மற்றும் மேக்ஸ் வேரியண்டின் அடிப்படையில் 5+2 இருக்கை, 5 இருக்கை, வைப் பேக் மற்றும் டூயல் டோன் உள்ளிட்ட மாறுபாடுகளுடன் மொத்தமாக 17 விதமான வேரியண்டுகள் உள்ளன. சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் விலை ரூ.9.99 லட்சம் முதல் ரூ.12.76 லட்சம் வரை அமைந்துள்ளது.