ரூ.3.69 லட்சம் முதல் ரூ.4.91 லட்சம் வரை விற்பனைக்கு வந்துள்ள மாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ மினி எஸ்யூவி இந்தியாவில் குறைவான விலை பெற்ற கார்களில் மிகவும் ஸ்டைலிஷான மினி எஸ்யூவி மாடலாக மாருதி சுசுகி நிறுவனத்தால் குறிப்பிடப்படுகின்ற எஸ் பிரஸ்ஸோ காரில் உள்ள சிறப்புகளை தொடர்ந்து காணலாம்.
அறிமுகம் செய்யப்பட்டுள்ள எஸ் பிரெஸ்ஸோ என்பது காப்பியை நினைவுப்படுத்தக்கூடிய பெயராகும். ESpresso எனப்படுகின்ற அழுத்தம் நிறைந்த வெந்நீரால் தயாரிக்கப்படுகின்ற குளம்பி அல்லது காப்பி தான் இந்த S-Presso என்ற பெயராக மாறியுள்ளது. காப்பி ரசிகர்களை மறக்கடிக்குமா எஸ் பிரெஸ்ஸோ என அறிந்து கொள்ளலாம்.
இளைய தலைமுறையினரை மற்றும் முதல் தலைமுறை கார் வாங்குவோரை மனதில் கொண்டு மாருதி வடிவமைத்துள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தில் தயாரிக்கப்பட உள்ள எஸ்-பிரெஸ்ஸோ இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு சர்வதேச நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளளது. குறிப்பாக தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியாவில் உள்ள வளரும் நாடுகளும் அடங்கும்.
எஸ்-பிரஸ்ஸோ காரில், மூன்று சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் K10B 1.0 லிட்டர் பொருத்தப்பட்டு பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்கு இணையாக விளங்கும். 50 கிலோவாட் (67.98 பிஎஸ்) அதிகபட்ச சக்தியை 5,500 ஆர்பிஎம் மற்றும் 90 என்எம் டார்க்கை 3,500 ஆர்பிஎம்-ல் வழங்கும். இந்த மாடலில் 5-ஸ்பீட் மேனுவல் மற்றும் 5-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் விருப்பங்களுடன் வழங்கப்படும்.
மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் மைலேஜ் லிட்டருக்கு 21.7 கிமீ ஆகும்.
எக்ஸ்டீரியர் ஸ்டைலை பொருத்தவரை தனது விட்டாரா பிரெஸ்ஸோ, மாருதி இக்னிஸ் உள்ளிட்ட மாடல்களில் உள்ள சில அம்சங்கள் அல்ட்டோ கே10 மற்றும் செலிரியோ கார்களுக்கு இணையான விலையில் கூடுதலான ஸ்டைலிங் அம்சங்களை பெற்றுள்ளது. குறிப்பாக எஸ்-பிரெஸ்ஸோ காரின் முகப்பு கிரில் அமைப்பு நேர்த்தியாக உள்ளதை தொடர்ந்து பம்பரில் எல்இடி ரன்னிங் விளக்குகள், கருப்பு நிற பம்பர், க்ரோம் பூச்சூ அல்லாத தோற்றம், 14 அங்குல சாதாரன ஸ்டீல் வீல் கருப்பு நிறத்தில் பெற்றுள்ளது.
இந்த காரில் சிவப்பு, நீலம், கிரே, சில்வர் வெள்ளை மற்றும் ஆரஞ்சு 6 விதமான நிறங்கள் வழங்கப்பட்டுள்ளது.
காரின் இன்டிரியர் அமைப்பு குறைந்த விலை கார்களில் ஒரு புதுமையான வடிவமைப்பினை பெற்றுள்ளது. டாஷ்போர்டின், மையமாக பொருத்தப்பட்ட டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் மற்றும் டேக்கோமீட்டரைக் கொண்டுள்ளது. அதன் கீழே 7.0 அங்குல மாருதியின் ஸ்மார்ட் பிளே ஸ்டுடியோ தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு, ஸ்பீடோமீட்டர் கன்சோல் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட ஒரு பெரிய வட்ட வடிவத்தைக் கொண்டுள்ளன, இந்த மினி எஸ்யூவிக்கு கூடுதல் அழகாக விளங்குகின்றது. வட்ட வட்டத்தின் இருபுறமும் மத்தியயில் ஏசி வென்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
வேகன் ஆர் மற்றும் பிற மாருதி மாடல்களில் காணப்படும் அதே ஸ்டீயரிங் உடன் மாருதியின் எஸ்-பிரெஸ்ஸோ வந்துள்ளது. ஸ்டீயரிங்கில் பொருத்தப்பட்ட ஆடியோ மற்றும் போன் கட்டுப்பாடுகள், கைமுறையாக சரிசெய்யக்கூடிய விங் மிரர், முன்புற பவர் விண்டோஸ், 12 வோல்ட் சாக்கெட், யூ.எஸ்.பி மற்றும் ஆக்ஸ் உள்ளீடுகளை கொண்டுள்ளது.
வேரியண்டுகள்
இந்த காரில் STD (O), LXi, LXi (O), VXi, VXi (O), VXi +, VXi AGS, VXi (O) AGS, மற்றும் VXi+ AGS மொத்தமாக 9 விதமான வேரியண்டுகளில் கிடைக்கின்றது. 3,565 மிமீ நீளம், 1,520 மிமீ அகலம் மற்றும் 1,564 மிமீ உயரம் கொண்டது. ரெனால்ட் க்விட் உடன் ஒப்பிடுகையில், இது 114 மிமீ குறைந்த நீளம், 59 மிமீ அகலம் குறைவாக மற்றும் 86 மிமீ கூடுதல் உயரம் கொண்டது. இது 42 மிமீ குறுகிய வீல்பேஸைக் கொண்டுள்ளது, எஸ் பிரெஸ்ஸோவின் வீல்பேஸ் 2,380 மிமீ ஆகும். மேலும் இந்த காரில் 165/70 அளவைப் பெற்று குறைந்த வேரியண்டில் 13 அங்குல வீல் மற்றும் டாப் வேரியண்டில் 14 அங்குல வீலை கொண்டிருக்கும். சாதாரன வீல் மட்டும் அனைத்து வேரியண்டிலும் கிடைக்க உள்ளது.
மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் மைலேஜ் லிட்டருக்கு 21.7 கிமீ ஆகும்.
பொதுவாக அனைத்து வேரியண்டிலும் இந்திய சந்தையில் ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டாய பாதுகாப்பு வசதிகளான ஓட்டுநர் ஏர்பேக், ஏபிஎஸ், ரியர் பார்க்கிங் சென்சார், சீட் பெல்ட் ரிமைண்டர், ஸ்பீடு அலர்ட் சிஸ்டம் ஆகியவற்றை கொண்டிருக்கின்றது. கூடுதலாக உடன் பயணிப்பவருக்கான ஏர்பேக் என்பது ஆப்ஷனல் வேரியண்டில் மட்டும் இடம்பெற்றுள்ளது. பாதுகாப்பு சார்ந்த கூடுதல் வசதிகள் பேஸ் வேரியண்டில் ஆப்ஷனலாக மட்டுமே வழங்கப்படுகின்றது.
மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் விலை பட்டியல்
Std- ₹3.69 lakh
LXI- ₹4.05 lakh
VXI- ₹4.24 lakh
VXI AGS- ₹4.67 lakh
VXI+- ₹4.48 lakh
VXI+ AGS- ₹4.91 lakh.