Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் மைலேஜ், விலை மற்றும் வேரியன்ட் விபரம்

by automobiletamilan
September 30, 2019
in கார் செய்திகள்

maruti-suzuki-s-presso

குறைவான விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ காரில் மொத்தமாக 10 வேரியண்டுகள் வழங்கப்பட்டுள்ளது. ரூ.3.69 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் தொடங்குகின்ற எஸ்-பிரெஸ்ஸாவின் டாப் வேரியண்ட் விலை ரூ.4.91 லட்சம் ஆகும்.

இந்த காரில் பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்கு இணையான மூன்று சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் K10B 1.0 லிட்டர் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 50 கிலோவாட் (68 பிஎஸ்) அதிகபட்ச சக்தியை 5,500 ஆர்பிஎம் மற்றும் 90 என்எம் டார்க்கை 3,500 ஆர்பிஎம்-ல் வழங்கும். இந்த மாடலில் 5-ஸ்பீட் மேனுவல் மற்றும் 5-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் விருப்பங்களுடன் விற்பனை செய்யப்படுகின்றது.

இந்த காரில் STD, STD (O), LXi, LXi (O), VXi, VXi (O), VXi +, VXi AGS, VXi (O) AGS, மற்றும் VXi+ AGS மொத்தமாக 10 விதமான வேரியண்டுகளில் கிடைக்கின்றது. குறிப்பாக ஆப்ஷனல் வேரியண்டுகளில் முன்பக்க பயணிகள் ஏர்பேக் மற்றும் பீரி டென்சனர் சீட் பெல்ட் கொண்டதாக வந்துள்ளது. சாதாரன வேரியண்டை விட ரூ.6,000 வரை விலை கூடுதலாக அமைந்துள்ளது.

maruti-suzuki-s-presso

Table of Contents

  • Maruti Suzuki S-Presso Std [ரூ. 3.69 லட்சம்]
  • Maruti Suzuki S-Presso LXi [ரூ. 4.05 லட்சம்]
  • Maruti Suzuki S-Presso VXi [ரூ. 4.25-4.68 லட்சம்]
  • Maruti S-Presso VXi+ [ரூ. 4.48-4.91 லட்சம்]

Maruti Suzuki S-Presso Std [ரூ. 3.69 லட்சம்]

  • ஒட்டுநர் ஏர்பேக்
  • ஏபிஎஸ்
  • ரியர்பார்க்கிங் சென்சார்
  • முன்புற சீட் பெல்ட்
  • வேக எச்சரிக்கை கருவி
  • டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர்
  • வாகன இம்மொபைல்சர்
  • 13 அங்குல ஸ்டீல் வீல்

Maruti Suzuki S-Presso LXi [ரூ. 4.05 லட்சம்]

Std வேரியண்டை வசதிகளுடன் கூடுதலாக

  • ஏசி
  • பவர் ஸ்டீயரிங்
  • சன் வைஷர்

Maruti Suzuki S-Presso VXi [ரூ. 4.25-4.68 லட்சம்]

LXi வேரியண்டை வசதிகளுடன் கூடுதலாக

  • கீலெஸ் என்ட்ரி
  • சென்டரல் லாக்கிங்
  • வேகத்தை உணர்ந்து கதவினை லாக் நுட்பம் செய்யும் வசதி
  • ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டியுன் மாருதி ஸ்மார்ட்பிளே ஸ்டூடியோ வசதி
  • முன்புற பவர் விண்டோஸ்
  • பாடி கலர் பம்பர்
  • வீல் கவருடன் 14 அங்குல ஸ்டீல் வீல்
  • கியர் ஷிஃப்ட் இன்டிகேட்டர் (MT)
  • 12V சாக்கெட்
  • கியர் பொசிஷன் இன்டிகேட்டர் (AMT)

Maruti S-Presso VXi+ [ரூ. 4.48-4.91 லட்சம்]

VXi வேரியண்டை வசதிகளுடன் கூடுதலாக

  • முன்பக்க பயணிகள் ஏர்பேக்
  • 7.0 ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டியுன் மாருதி ஸ்மார்ட்பிளே ஸ்டூடியோ வசதியுடன் வாய்ஸ் கன்ட்ரோல்
  • ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ
  • ஸ்டீயரிங் மவுன்டேட் கன்ட்ரோல்
  • ரியர் பார்சல் டிரே
  • இன்டரனல் விங் மிரர்
  • முன்புற இருக்கை ப்ரீ டென்சனர்
  • பாடி கலர் ஹேண்டில் மற்றும் விங் மிரர்
  • பார்க்கிங் பிரேக்

மாருதி எஸ்-பிரெஸ்ஸோ மைலேஜ் விபரம்

STD, STD (O), LXi, LXi (O) என நான்கு மாருதியின் பேஸ் எஸ் பிரெஸ்ஸோ காரின் மைலேஜ் லிட்டருக்கு 21.4 கிமீ ஆகும்.

VXi, VXi (O), VXi +, VXi AGS, VXi (O) AGS, மற்றும் VXi+ AGS மாருதியின் எஸ் பிரெஸ்ஸோ காரின் மைலேஜ் லிட்டருக்கு 21.7 கிமீ ஆகும்.

மாருதி எஸ் பிரெஸ்ஸோ விலை பட்டியல்

Std ரூ. 3.69 லட்சம்

LXi ரூ. 4.05 லட்சம்

VXi ரூ. 4.25 லட்சம்

VXi+ ரூ. 4.48 லட்சம்

VXi AMT ரூ. 4.68 லட்சம்

VXi+ AMT ரூ. 4.91 லட்சம்

(எக்ஸ்-ஷோரூம் தமிழ்நாடு)

அனைத்து வேரியண்டிலும் குறிப்பாக ஆப்ஷனல் வேரியண்டுகளில் முன்பக்க பயணிகள் ஏர்பேக் மற்றும் பீரி டென்சனர் சீட் பெல்ட் கொண்டதாக வந்துள்ளது. சாதாரன வேரியண்டை விட ரூ.6,000 வரை விலை கூடுதலாக அமைந்துள்ளது.

maruti-suzuki-s-presso maruti-suzuki-s-presso

இங்கே காட்சிக்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து படங்களும் ஆக்செரிஸ் பெற்றதாகும். 14 அங்குல 12 ஸ்போக் அலாய் வீல் ரூ.5,590 ஆகும்.

Tags: Maruti Suzuki S-pressoமாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version