மாருதி சுசுகியின் புதுப்பிக்கப்பட்ட 2020 விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய மாடல் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினை பெற்றதாக விற்பனைக்கு கிடைக்க உள்ளது. தற்போது முன்பதிவு துவங்கியுள்ள நிலையில் விலை இம்மாத இறுதியில் அறவிக்கப்பட உள்ளது.
விற்பனைக்கு வந்த நாள் முதல் தற்போது வரை 5 லட்சத்துக்கும் அதிகமான யூனிட்டுளை இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. 4 மீட்டருக்கு குறைந்த நீளத்தைப் பெற்ற விட்டாரா பிரெஸ்ஸா கடுமையான போட்டியை எதிர்கொள்ளும் நிலையில், விற்பனைக்கு கிடைத்து வந்த பிஎஸ்4 1.3 லிட்டர் டீசல் என்ஜின் கைவிடப்ட்டுள்ளது.
எனவே, மாருதி சியாஸ், எர்டிகா மற்றும் எக்ஸ்எல் 6 கார்களில் பாரத் ஸ்டேஜ் 6 மாசு உமிழ்வுக்கு ஆதரவான 1.5 லிட்டர் கே சீரிஸ் பெட்ரோல் என்ஜின் சுசூகியின் SHVS நுட்பத்துடன் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 103 ஹெச்பி பவர் மற்றும் 138 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 4 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை பெற உள்ளது.
விட்டாரா பிரெஸ்ஸா பெட்ரோல் மாடல் மைலேஜ் லிட்டருக்கு 18.7 கிமீ (மேனுவல்) மற்றும் ஆட்டோமேட்டிக் மாடல் 18.76 கிமீ ஆகும்.
Specifications |
|||
Length | 3995 mm | Engine | K15B 1.5-litre naturally aspirated four-cylinder petrol engine |
Height | 1640 mm | BS6 compliant | |
Width | 1790 mm | Max Torque | 138 Nm @ 4400 rpm |
Wheel Base | 2500 mm | Max Power | 77 kW (104.69 PS) @ 6000 rpm |
Fuel Economy Rating | MT: 17.03 km/lAT (with Smart Hybrid): 18.76 km/l |
புதிய விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி காரில் புதுப்பிக்கப்பட்ட முன்புற பம்பருடன் புதிய புராஜெக்டர் எல்இடி ஹெட்லைட், எல்இடி டிஆர்எல் விளக்குகள், எல்இடி டெயில் லைட் உட்பட 16 அங்குல அலாய் வீல், புதிய டெயில்கேட் மற்றும் பின்புற பம்பரை கொண்டதாக வெளியிடப்பட உள்ளது. புதிதாக நீலம் மற்றும் சிவப்பு நிறம் சேர்க்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் வெளியான ஹூண்டாய் வென்யூ உட்பட ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், எக்ஸ்யூவி 300, டாடா நெக்ஸான், வரவுள்ள கியா சோனெட் போன்ற மாடல்களை 2020 சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா எதிர்கொள்ள உள்ளது.