4 மீட்டருக்கு குறைந்த நீளத்தை பெற்ற எஸ்யூவி காரின் மேம்பட்ட 2020 மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி காரின் அறிமுகம் ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் செய்யப்பட உள்ளது. முன்பாக விற்பனையில் கிடைத்து வருகின்ற மாடலை தோற்ற அமைப்பு உட்பட பிஎஸ்6 பெட்ரோல் என்ஜினை பெற்றதாக வரவுள்ளது.
தற்போது கிடைத்து வருகின்ற 1.3 லிட்டர் டீசல் என்ஜின் கைவிடப்பட உள்ள நிலையில், இனி மாருதி சியாஸ், எர்டிகா மற்றும் எக்ஸ்எல் 6 கார்களில் பாரத் ஸ்டேஜ் 6 மாசு உமிழ்வுக்கு ஆதரவான 1.5 லிட்டர் கே சீரிஸ் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 103 ஹெச்பி பவர் மற்றும் 138 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 4 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை பெற உள்ளது.
புதிய விட்டாரா பிரெஸ்ஸா காரில் புதுப்பிக்கப்பட்ட பம்பருடன் புராஜெக்டர் எல்இடி ஹெட்லைட், எல்இடி டிஆர்எல் விளக்குகள், எல்இடி டெயில் லைட் உட்பட 16 அங்குல அலாய் வீல், புதுப்பிக்கப்பட்ட டெயில்கேட் மற்றும் பின்புற பம்பரை கொண்டதாக வெளியிடப்பட உள்ளது.
சமீபத்தில் வெளியான வென்யூ உட்பட ஈக்கோஸ்போர்ட், எக்ஸ்யூவி 300, டாடா நெக்ஸான் போன்ற மாடல்களை 2020 சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா எதிர்கொள்ள உள்ளது.