Categories: Car News

ரூ.9.79 லட்சம் ஆரம்ப விலையில் மாருதி சுசுகி XL6 விற்பனைக்கு அறிமுகமானது

maruti suzuki xl6

6 சீட்டர் பெற்ற எம்பிவி ரக மாடலாக வந்துள்ள மாருதி சுசூகி XL6 காரின் ஆரம்ப விலை ரூபாய் 9.79 லட்சத்தில் தொடங்கி அதிகபட்சமாக ரூ.11.46 லட்சத்தில் நிறைவடைகின்றது. பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்கு இணையான பெட்ரோல் ஹைபிரிட் 1.5 லிட்டர் என்ஜினை கொண்டதாக விற்பனைக்கு வெளியாகியுள்ளது. பிரீமியம் தோற்ற பொலிவு, தாராளரமான இடவசதி கொண்ட 6 இருக்கைகள், ஸ்மார்ட்பிளே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், க்ரூஸ்வ கண்ட்ரோல் எக்ஸ்எல் 6 காரின் மைலேஜ் போன்றவை முக்கிய கவனத்தை பெறுகின்றது.

5வது தலைமுறை மாருதி சுசுகி Heartect பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள XL6 எம்பிவி மாடலில் பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்கு இணையான 1.5 லிட்டர் ஸ்மார்ட் ஹைபிரிட் SHVS பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 105 பிஎஸ் (77KW) பவருடன் 138 என்எம் டார்க் வழங்குகின்றது. இதில் 4 வேக டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் மற்றும் 5 மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்க உள்ளது.

எக்ஸ்எல் 6 காரின் மைலேஜ் லிட்டருக்கு 5 வேக மேனுவல் மாடலுக்கு 19.01 கிமீ மற்றும் ஆட்டோமேட்டிக் மாடல் அதிகபட்சமாக 17.99 கிமீ தரவல்லத்தாகும்.

ஆல்ஃபா மற்றும் ஜெட்டா என இரு வேரியண்டுகளை பெற்றுள்ள இந்த காரில் வாட் எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குகள், பாடி கிளாடிங், 15 அங்குல அலாய் வீல் போன்றவற்றுடன் நேர்த்தியான டெயில் லைட் கொண்டதாக வந்துள்ளது.

 

6 கேப்டன் இருக்கைகள் வழங்கப்பட்டு மாருதியின் 7.0 இன்ச் ஸ்மார்ட் பிளே ஸ்டூடியோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொண்டிருப்பதுடன், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே உள்ளிட்ட வசதிகளுடன் ப்ளூடூத், USB, AUX-in , க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற அம்சங்களை கொண்டதாக அமைந்திருக்கிறது. கூடுதலாக எக்ஸ்எல்6 ஆல்பா வேரியண்டில் ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, லெதர் இருக்கைகள், மற்றும் ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப் போன்றவற்றை பெற்றிருக்கின்றது.

சாதாரண எர்டிகா காரை விட விலை உயர்த்தப்பட்டுள்ள இந்த மாடல் ரெனோ லாட்ஜி, எர்டிகா, மற்றும் மஹிந்திரா மராஸ்ஸோ உட்பட பிரீமியம் இன்னோவா கிரிஸ்டா போன்ற மாடல்களுக்கு போட்டியாக விளங்க உள்ளது

மாருதி சுசுகி XL6 விலை பட்டியல்

Maruti Suzuki XL6 Zeta – ரூ.9,79,689

Maruti Suzuki XL6 Zeta (AT) – ரூ. 10,89,689

Maruti Suzuki XL6 ALpha – ரூ. 10,36,189

Maruti Suzuki XL6 ALpha (AT) – ரூ.11,46,189

Recent Posts

ஆடம்பர கார்களுக்கு எம்ஜி செலக்ட் டீலரை துவங்கும் ஜேஎஸ்டபிள்யூ..!

ஜேஎஸ் டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் ஆடம்பர கார்களுக்கு மற்றும் பிரத்தியேகமான நியூ எனர்ஜி வாகனங்கள் விற்பனை செய்வதற்கு எம்ஜி…

17 hours ago

160கிமீ ரேஞ்ச் வழங்கும் 2024 ரிவோல்ட் RV400 அறிமுகமானது

ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரபலமான RV400 எலெக்ட்ரிக் பைக்கில் விரைவு சார்ஜர் வசதியுடன் முந்தைய மாடலை விட கூடுதலாக 10…

22 hours ago

இந்தியாவில் ஹோண்டாவின் 300-350cc பைக்குகள் ரீகால் அழைப்பு

கேம் ஷாஃப்ட் மற்றும் வீல் ஸ்பீடு சென்சாரில் ஏற்பட்டுள்ள கோளாறுகளை சரி செய்வதற்காக ஹோண்டா இந்தியா நிறுவனம் தனது 300…

1 day ago

முதல் நாளில் 1,822 முன்பதிவுகளை அள்ளிய கியா கார்னிவல்..!

கியா நிறுவனத்தின் ஆடம்பர மாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ள 2024 கார்னிவல் எம்பிவி மாடலின் முன்பதிவு துவங்கப்பட்ட முதல் நாளிலே…

1 day ago

டிரையம்ப் ஸ்பீடு T4 Vs ஸ்பீடு 400 வித்தியாசங்கள் என்ன..!

டிரையம்ப் மோட்டார் சைக்கிள் நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ள குறைந்த விலை ஸ்பீடு T4 மாடல் மற்றும் ஏற்கனவே விற்பனையிலிருந்து தற்போது…

2 days ago

ரூ.84,990 விலையில் ரிவோல்ட் RV1, RV1+ இ-பைக் விற்பனைக்கு அறிமுகமானது

ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் பைக் மாடல் RV1 மற்றும் RV1 பிளஸ் என இரண்டு மாடல்கள் விற்பனைக்கு…

2 days ago