மாருதி சுசூகி நிறுவனம் தொடர்ந்து தனது கார்களில் ஆறு ஏர்பேக்குகளை அடிப்படையாக சேர்த்து வருகின்ற நிலையில் தற்போது XL6 மாடலிலும் 6 காற்றுப்பைகளை கொண்டு வந்திருக்கின்றது. இதனை தொடர்ந்து விலை 0.8 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தி உள்ளதால் ரூ.7000 முதல் ரூபாய் 10,000 முறை விலை அதிகரித்துள்ளது.
எனவே, புதிய மாருதி சுசூகி XL6 காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.11.92 லட்சம் முதல் ரூ.14.45 லட்சம் வரை அமைந்துள்ளது.
1.5 லிட்டர், நான்கு சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் 103hp மற்றும் 137Nm டார்க் உற்பத்தி செய்கிறது மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு AT கியர்பாக்ஸுடன் வருகிறது. CNG-ல், இந்த எஞ்சின் 88hp மற்றும் 121Nm உற்பத்தி செய்கிறது.
மற்ற பாதுகாப்பு அம்சங்களில் XL6ல் ESC, அனைத்து இருக்கைகளுக்கும் ரிமைண்டருடன் கூடிய 3-புள்ளி இருக்கை பெல்ட்கள் மற்றும் பிரேக்-அசிஸ்ட், டயர்-அழுத்த கண்காணிப்பு அமைப்பு மற்றும் 360-டிகிரி கேமரா ஆகியவை உள்ளது.
எர்டிகா அடிப்படையில் உள்ள இந்த மாடல் ஆனது கூடுதலான சிறப்பம்சங்களுடன் பிரிமியம் வசதிகளை பெற்ற எம்பிவி ரக மாடலாக இந்திய சந்தையில் கிடைக்கின்றது. இந்த மாடலுக்கு போட்டியாக சந்தையில் காரன்ஸ் கிளாவிஸ் உட்பட மஹிந்திரா மராஸ்ஸோ ஆகியவை விற்பனையில் உள்ளன.