மாருதி சுசுகி நிறுவனம் கூடுதல் வசதிகளை பெற்ற மாருதி ஸ்விஃப்ட் லிமிடெட் எடிசன் ரூ.5.45 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மாருதி ஸ்விஃப்ட் லிமிடெட் எடிசன்

அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள 2018 ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் புதிய தலைமுறை மாருதி சுசுகி ஸ்விஃப்ட் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ள நிலையில், இருப்பில் உள்ள ஸ்விஃப்ட் கார்களை விற்பனை செய்யும் நோக்கில் வரையறுக்கப்பட்ட எடிசன் விற்பனைக்கு வெளியாகியுள்ளது.

LXi மற்றும் VXi ஆகிய வேரியன்டின் அடிப்படையில் பானெட், பக்கவாட்டு மற்றும் மேற்கூறை ஆகியவற்றை ஸ்டிக்கரிங் செய்யப்பட்டுள்ள நிலையில் உட்புறத்தில் புதிய இருக்கை கவர் மற்றும் ஸ்டீயரிங் வீல் ஆகியவற்றுடன் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே ஆகிய அம்சங்களை பெற்றதாக வந்துள்ளது.

மாருதி ஸ்விஃப்ட் பெட்ரோல் மாடல் விலை ரூ.5.45 லட்சம் மற்றும் ஸ்விஃப்ட் டீசல் மாடல் விலை ரூ.6.40 லட்சம் விலையில் கிடைக்க தொடங்கியுள்ளது.