Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

இந்தியாவில் எம்ஜி eZS எலெக்ட்ரிக் எஸ்யூவி உற்பத்தியை தொடங்கிய எம்ஜி மோட்டார்

by automobiletamilan
June 5, 2019
in கார் செய்திகள்

எம்ஜி eZS எஸ்யூவி

எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம், டிசம்பர் மாதம் வெளியிட உள்ள எம்ஜி eZS எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் உற்பத்தியை தனது இந்திய ஆலையில் தொடங்கியுள்ளது. நேற்று முதல் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி காருக்கான முன்பதிவு இந்தியளவில் ஆன்லைன் மற்றும் 120 டீலர்கள் வாயிலாக தொடங்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் நிறுவனம், அடுத்த மாதம் இந்தியாவில் கோனா எலக்ட்ரிக் காரை வெளியிட உள்ளது. இந்நிலையில் இதற்கு போட்டியாக எம்ஜி இஇசட்எஸ் எலக்ட்ரிக் கார் விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எம்ஜி eZS எலெக்ட்ரிக் எஸ்யூவி

எஸ்ஏஐசி கீழ் செயல்படும் எம்ஜி நிறுவனம், தனது முதல் காரை பல்வேறு கனெக்டேட் வசதிகளை கொண்டதாக ஹெக்டர் எஸ்யூவி விற்பனைக்கு வரவுள்ளது. தமிழகத்தில் சென்னை ஓஎம்ஆர் மற்றும் சென்னை அண்ணா சாலை போன்றவற்றில் டீலர்களையும், மதுரை மற்றும் கோவையில் விரைவில் துவங்க உள்ளது.

S பெட்ரோல் வெர்ஷனை அடிப்படையாக கொண்ட எம்ஜி எலெக்ட்ரிக் ZS மாடலில் பொருத்தப்பட்டுள்ள மின்சார மோட்டார் அதிகபட்சமாக 150 ஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 350 என்எம் டார்க் வழங்குவதுடன், NEDC சான்றிதழ் படி அதிகபட்சமாக 335 கிமீ தொலைவு பயணிக்கும் திறன் கொண்டதாக விளங்கும்.

வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் 250 டீலர்களை திறக்க எம்ஜி திட்டமிட்டுள்ள நிலையில், ஹெக்டர் எஸ்யூவி ஜூலை மாதம் விற்பனைக்கு வெளியாக உள்ளது. அதனை தொடர்ந்து இரண்டாவது எலெக்ட்ரிக் மாடலாக எம்ஜி இ-இசட்எஸ் எஸ்யூவி மாடல் இந்தியாவில் பெரும்பாலான உதிரிபாகங்கள் எலக்ட்ரிக் மாடலுக்கு தயாரிக்கப்பட உள்ளதால் மிகவும் சவாலான விலையில் டிசம்பர் 2019 -ல் விற்பனைக்கு வெளியிட உள்ளது.

Tags: MG eZSMG Motorஎம்ஜி eZSஎம்ஜி eZS எலெக்ட்ரிக் எஸ்யூவிஎம்ஜி மோட்டார்
Previous Post

மீண்டும் கேடிஎம் 125 டியூக் பைக்கின் விலை உயர்த்தப்பட்டுள்ளது

Next Post

டீசல் என்ஜின் பெற்ற கேயூவி100 எஸ்யூவி காரை நீக்கும் மஹிந்திரா

Next Post

டீசல் என்ஜின் பெற்ற கேயூவி100 எஸ்யூவி காரை நீக்கும் மஹிந்திரா

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version