இந்தியாவில் ஜூன் மாதம் விற்பனைக்கு வரவுள்ள புதிய ஹெக்டர் எஸ்யூவி காரை எம்ஜி மோட்டார் வெளியிட உள்ள மாடலில் 5 இருக்கைகள் கொண்டிருக்கும். கூடுதலாக 7 இருக்கை கொண்ட ஹெக்டரை பிஎஸ் 6 மாசு கட்டுப்பாடு விதி நடைமுறைக்கு வருவதற்கு முன்பாக விற்பனைக்கு வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளது.
சீன சந்தையில் விற்பனையில் செய்யப்படுகின்ற 7 இருக்கை கொண்ட ஹெக்டர் அடிப்படையிலான Baojun 530 மாடலினை பின்னணியாக கொண்டே 7 சீட்டர் மாடலை இந்நிறுவனம் வெளியிட உள்ளது. பாரத் ஸ்டேஜ் 6 மாசு கட்டுப்பாடு விதிகள் ஏப்ரல் 1, 2020 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
7 இருக்கை ஹெக்டர் எஸ்யூவி
இணையம் சார்ந்த பல்வேறு அம்சங்களை பெற்ற முதல் எஸ்யூவி ரக மாடலாக இந்தியாவில் வெளியாக உள்ள ஹெக்டரில் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் என இரு ஆப்ஷனில் வரவுள்ளது. குறிப்பாக 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மாடலில் 48 வோல்ட் ஹைபிரிட் ஆப்ஷன் வழங்கியுள்ளது.
இதுகுறித்து ஆட்டோகார் இந்தியா வலைதளம் வெளியிட்டுள்ள தகவலில் , இதை நாங்கள் 7 அல்லது 8 இருக்கை வேரியன்ட் என அழைக்க வாய்ப்பில்லை, ஆனால் மூன்றாவது வரிசை இருக்கை பெற்ற மாடல் பாரத் ஸ்டேஜ் 6 மாசு விதிகள் நடைமுறைக்கு வரும் போது விற்பனைக்கு கிடைக்க வரும் என எம்ஜி மோட்டாரின் இந்தியப் பிரிவு தலைவர் குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
குறிப்பாக 5 இருக்கை மாடலின் அளவுகளில் எந்த மாற்றங்களும் இல்லாமல் 7 இருக்கை மாடல் மூன்றாவது வரிசை இருக்கை இணைக்கப்படிருக்கும். தற்போது 5 சீட்டர் மாடலில் 587 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட் ஸ்பேஸ் மட்டும் குறைய வாய்ப்புகள் உள்ளது.
எம்ஜி ஹெக்டர் என்ஜின் மற்றும் மைலேஜ் விபரம்
இண்டர்நெட் காராக வலம் வரவுள்ள ஹெக்டரின் சிறப்புகள்