வரும் செப்டம்பர் 29 ஆம் தேதி முதல் மீண்டும் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி மாடல்க்கான முன்பதிவு தொடங்கப்பட உள்ளது. 28,000க்கு மேற்பட்ட முன்பதிவை பெற்றிருந்த ஹெக்டர் எஸ்யூவி காருக்கான முன்பதிவை தற்காலிகமாக நிறுத்தியிருந்தது.
கடந்த இரு மாதங்களில் 3,500 எஸ்யூவி கார்களை டெலிவரி கொடுத்தள்ள இந்நிறுவனம், தனது உற்பத்தியை எண்ணிக்கையை அக்டோபர் முதல் 3,000 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ள நிலையில் மீண்டும் முன்பதிவை தொடங்குவதாக அறிவித்துள்ளது. இந்நிறுவனம் சமீபத்தில் 5,000 யூனிட் உற்பத்தியை கடந்துளதாக குறிப்பிட்டிருந்த்து. அக்டோபர் முதல் தொடங்கப்படுகின்ற முன்பதிவில் பதிவு செய்வோருக்கு கார்கள் இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் கார்கள் வழங்கப்படலாம்.
143 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெட்ரோல் மாடலில் 6 வேக மேனுவல் மற்றும் 7 வேக ஆட்டோ கியர்பாக்ஸ் உள்ளது. கூடுதலாக வழங்கப்பட்டுள்ள 48 வோல்ட் ஹைபிரிட் சிஸ்டம் பெற்ற மாடல் 12 சதவீத கூடுதல் எரிபொருள் சிக்கனம் மற்றும் குறைவான வேகத்தில் 20Nm இழுவைத்திறன் வழங்குகின்றது.
2.0 லிட்டர் டர்போ டீசல் நான்கு சிலிண்டர் பெற்ற என்ஜின் கொண்ட ஹெக்டர் டீசல் மாடல் 170hp குதிரைத்திறன் மற்றும் 350 Nm இழுவைத்திறன் உடன் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக உள்ளது.
ஹெக்டர் எஸ்யுவி பெட்ரோல் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 14.16 கிமீ (மேனுவல்), ஆட்டோமேட்டிக் மாடல் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 13.96 கிமீ மற்றும் பெட்ரோல் ஹைபிரிட் வேரியன்ட் மைலேஜ் லிட்டருக்கு 15.91 கிமீ ஆகும்.
எம்ஜி மோட்டாரின் ஹெக்டர் டீசல் மாடல் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 17.41 கிமீ ஆகும்.
எம்ஜி ஹெக்டர் விலை பட்டியல்