இந்திய சந்தையில் குறைந்த விலையில் துவங்கும் டீசல் என்ஜின் பெற்ற கார் மற்றும் எஸ்யூவி மாடல்கள் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், ரூ.10 முதல் ரூ.15 லட்சம் ஆன்-ரோடு விலைக்குகள் கிடைக்கின்ற மாடல்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
மிக கடுமையான மாசு உமிழ்வு விதிகளுக்கு ஏற்ப பல்வேறு சிறிய டீசல் என்ஜின் மாடல்கள் நீக்கப்பட்டுள்ளது. பெரிய எஸ்யூவி மற்றும் ஆடம்பர கார்களில் மட்டும் தொடர்ந்து டீசல் என்ஜின் இடம்பெற்று வருகின்றது.
Tata Altroz
தற்பொழுது இந்தியாவில் கிடைக்கின்ற மிக விலை குறைந்த டீசல் என்ஜின் பெற்ற மாடல் என்ற பெருமையுடன் விற்பனை செய்யப்படுகின்ற டாடா அல்ட்ராஸ் காரின் விலை ரூ.8.80 லட்சம் முதல் ரூ.10.74 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அல்ட்ராசில் பொருத்தப்பட்டுள்ள 1.5 லிட்டர் ரெவோடார்க் டீசல் என்ஜின அதிகபட்சமாக 89 hp பவர் மற்றும் 200NM டார்க் வழங்குகின்றது. இந்த மாடலில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அல்ட்ராஸ் டீசல் காரின் மைலேஜ் 23.64 Kmpl ஆகும்.
டாடா அல்ட்ராஸ் டீசல் கார் ஆன்-ரோடு விலை ரூ.10.23 லட்சம் முதல் ரூ.13.08 லட்சம் வரை கிடைக்கின்றது.
Mahindra Bolero
இந்தியாவின் அதிக விற்பனை ஆகின்ற டீசல் என்ஜின் பெற்ற மாடல் என்ற பெருமையுடன் உள்ள 7 இருக்கையுள்ள பொலிரோ எஸ்யூவி விற்பனைக்கு ரூ.9.79 லட்சம் முதல் ரூ. 10.80 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பெலிரோ நியோ காரின் விலை ரூ.9.64 லட்சம் முதல் ரூ.14 லட்சம் வரை ஆம்புலன்ஸ் வேரியண்ட் விற்பனை செய்யப்படுகின்றது.
மஹிந்திரா பொலிரோ 1.5 லிட்டர் டீசல் என்ஜின அதிகபட்சமாக 75 hp பவர் மற்றும் 210NM டார்க் வழங்குகின்றது. இந்த மாடலில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
பொலிரோ நியோ 1.5 லிட்டர் டீசல் என்ஜின அதிகபட்சமாக 100 hp பவர் மற்றும் 260NM டார்க் வழங்குகின்றது. இந்த மாடலில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
மஹிந்திரா பொலிரோ காரின் ஆன்-ரோடு விலை ரூ. 11.40 லட்சம் முதல் ரூ.13.21 லட்சம் வரையும், பொலிரோ நியோ எஸ்யூவி ஆன்-ரோடு விலை ரூ. 11.24 லட்சம் முதல் ரூ. 14.82 லட்சம் வரை கிடைக்கின்றது.
Mahindra XUV300
மஹிந்திரா நிறுவவனத்தின் மற்றொரு காம்பேக்ட் எஸ்யூவி மாடலான XUV300 டீசல் என்ஜின் விலை ரூ.10.21 லட்சம் முதல் ரூ. 14.75 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
1.5 லிட்டர் டீசல் என்ஜின அதிகபட்சமாக 115 hp பவர் மற்றும் 300NM டார்க் வழங்குகின்றது. இந்த மாடலில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
மஹிந்திரா XUV300 எஸ்யூவி காரின் ஆன்-ரோடு விலை ரூ. 12.49 லட்சம் முதல் ரூ.17.92 லட்சம் வரை கிடைக்கின்றது.
Kia Sonet
கியா மோட்டார் நிறுவனத்தின் சொனெட் எஸ்யூவி காரின் டீசல் என்ஜின் விலை ரூ. 9.95 லட்சம் முதல் ரூ. 14.89 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
1.5 லிட்டர் டீசல் என்ஜின அதிகபட்சமாக 100 hp பவர் மற்றும் 240NM டார்க் வழங்குகின்றது. இந்த மாடலில் ஏஎம்டி கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
கியா சொனெட் எஸ்யூவி காரின் ஆன்-ரோடு விலை ரூ. 11.45 லட்சம் முதல் ரூ.17.92 லட்சம் வரை கிடைக்கின்றது.
Hyundai Venue
ஹூண்டாய் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற காம்பேக்ட் எஸ்யூவி மாடலான வென்யூ விலை ரூ. 10.59 லட்சம் முதல் ரூ. 13.34 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
1.5 லிட்டர் டீசல் என்ஜின அதிகபட்சமாக 116 hp பவர் மற்றும் 250NM டார்க் வழங்குகின்றது. இந்த மாடலில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. புதிய ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி காரின் ஆன்-ரோடு விலை ரூ.12.93 லட்சம் முதல் ரூ.16.25 லட்சம் வரை கிடைக்கின்றது.
Tata Nexon
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய நெக்ஸான் எஸ்யூவி காரின் விலை ரூ. லட்சம் முதல் ரூ. வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
115hp பவர் மற்றும் 160Nm டார்க் வெளிப்படுத்தும் 1.5-லிட்டர் டீசல் என்ஜின் ஆனது, 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு AMT உடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாடலின் மைலேஜ் லிட்டருக்கு 24.08Kmpl ஆகும்.
புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவி காரின் ஆன்-ரோடு விலை ரூ.13.45 லட்சம் முதல் ரூ.18.88 லட்சம் வரை கிடைக்கின்றது.
Mahindra Thar
மஹிந்திரா நிறுவனத்தின் லைஃப்ஸ்டைல் எஸ்யூவி தார் விலை ரூ.10.98 லட்சம் முதல் ரூ.16.94 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக 3750 RPM -ல் 130 ஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 300 என்எம் முறுக்குவிசை திறனை 1600 – 2800 RPM -ல் வெளிப்படுத்தும் 2.2 லிட்டர் எம் ஹாக் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்ட்டர் என இரு விதமான ஆப்ஷனை பெறுகின்றது.
புதிய 1.5 லிட்டர் D117 CRDe டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 117 பிஎச்பி மற்றும் 300 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது.
புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி காரின் ஆன்-ரோடு விலை ரூ.13.41 லட்சம் முதல் ரூ.20.78 லட்சம் வரை கிடைக்கின்றது.