Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

அடுத்த மாதம் அறிமுகமாகிறது புதிய தலைமுறை மாருதி எர்டிகா

by automobiletamilan
October 12, 2018
in கார் செய்திகள்
0
SHARES
0
VIEWS
ShareRetweet

மாருதி சுசூகி இந்தியா நிறுவனம் தனது புதிய மாருதி எர்டிகா கார்களை இந்தியாவில் வரும் நவம்பர் 18ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த கார்கள் மாருதி நிறுவனத்தின் பலேனோ கார்கள் வடிவமைக்கப்பட்ட பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டுள்ளது. எர்டிகா கார்களில் ஆர்ப்பாட்டமான விஷ்வல் மாற்றங்களுடனும், MPV-களுடன் சரியான முறையில் இணைக்கப்பட்டுள்ளது.

புதிய எர்டிகா கார்களை இதற்கு முந்தைய மாடல்களுடன் ஒப்பிடும் போது 99mm நீளமும், 40 mm அகலமும், 5 mm உயரமும் மக் கொண்டதாக இருக்கும். இந்த காரின் வீல்பேசில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை, அது 2,740mm ஆக இருக்கும்

காரின் முன்புறம், முழுவதுமாக பல்வேறு வசதிகளுடன் வெளியாக உள்ளது. இதில், ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன், கீலேய்ஸ் என்ட்ரி, புரொஜெக்டர் ஹெட்லேம்கள், LED டைல்லேம்கள், ஆட்டோமேடிக் கிளைமாட்டிக் கண்ட்ரோல், ரியர் ஏசி வென்ட்கள், மல்டி பங்க்ஷன் கொண்டஸ்டீயரிங் வீல் மற்றும் ஸ்மார்ட்பிளே டச் ஸ்க்ரீன் இன்போடேய்ன்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது

பாதுகாப்பு வசதிகளை பொறுத்தவரை புதிய மாருதி எர்டிகா காரில் டுயல் பிராண்ட் எர்பேக்ஸ், EBD களுடன் ABS களை கொண்டுள்ளது. முன்புற சீட்டில் அமர்பவர்களுக்கான சீட் பெல்ட் ரீமைண்டர், அதிவேக குறித்து எச்சரிக்கை செய்யும் வசதி, ஸ்பீட் சென்ஸிங் ஆட்டோ டூர் லாக், ISOFIX குழந்தைகள் சீட் ஆங்கர்கள், ரியர் பார்கிங் சென்சார்கள் மற்றும் ஆட்டோ டூர் அன்லாக் போன்றவை இடம் பெற்றுள்ளது.

புதிய மாருதி எர்டிகா கார்கள் 1.5 லிட்டர் K15B பெட்ரோல் இன்ஜினை கொண்டுள்ளது. இந்த இன்ஜின்கள் 103 bhp ஆற்றலுடன், 138 Nm டார்க்யூவுடன் இயங்கும். இந்த இன்ஜின் 5 ஸ்பீட் மெனுவல் யூனிட் மற்றும் 4 ஸ்பீட் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டிருக்கும். மேலும் இதில் SHVS மைல்ட் ஹைபிரிட் தொழில்நுட்பங்களையும் கொண்டுள்ளது.

புதிய எர்டிகா டீசல் இன்ஜின்கள் 1.5 லிட்டர் கொண்டதாகவும், இந்த் இன்ஜின் ஆறு ஸ்பீட் மெனுவல் யூனிட்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய எர்டிகா கார்கள், மாருதி நிறுவனத்தின் நெக்சா செயின் அவுட்லேட்களில் விற்பனை செய்யப்பட உள்ளது.

Tags: launchMaruti Ertiga IndiaNew GenerationNovemberஅடுத்த மாதம்அறிமுகமாகிறதுபுதிய தலைமுறைமாருதி எர்டிகா
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan

Go to mobile version