Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

2023 ஹூண்டாய் வெர்னா காரில் உள்ள சிறப்புகள்

by MR.Durai
10 March 2023, 1:03 am
in Car News
0
ShareTweetSend

2023 Hyundai Verna 1

பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் டிசைன் மாற்றங்கள் என பெற்றுள்ள புதிய ஹூண்டாய் வெர்னா காரில் இடம்பெற உள்ள வசதிகள் பற்றி இந்நிறுவனம் தற்பொழுது வரை வெளியிட்டுள்ள முக்கிய விபரங்களை அறிந்து கொள்ளலாம். வரும் மார்ச் 21 ஆம் தேதி விலை அறிவிக்கப்பட உள்ளது.

புதிய வெர்னா காருக்கான முன்பதிவு கட்டணமாக ரூ. 25,000 வசூலிக்கப்பட்ட வருகின்றது. ஆட்டோமேட்டிக் வேரியண்டுகளுக்கு அதிகப்படியான முன்பதிவு பெற்று வரும் நிலையில் டெலிவரி ஏப்ரல் மாத மத்தியில் துவங்கப்பட உள்ளது. புதிய தலைமுறை வெர்னா காரினை பெறும் முதல் சந்தையாக இந்தியா விளங்க உள்ளதால் எதிர்பார்ப்புகள் அதிரித்துள்ளது. இரண்டு பெட்ரோல் என்ஜின்  பெற்ற உள்ள இந்த காரின் பவர் மற்றும் டார்க் விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

புதிய 1.5-லிட்டர் டர்போ GDi, பெட்ரோல் என்ஜின் கொண்ட மாடல் 160 Hp வரை பவர் வெளிப்படுத்தலாம். இதில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என இரு விதமாக வழங்கப்பட்டிருக்கும்.

அடுத்து, 115 Hp பவர் மற்றும் 144Nm டார்க் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் MPi பெட்ரோல் என்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் இன்டலிஜென்ட் வேரிபிள் டிரான்ஸ்மிஷன் (IVT) என இரு ஆப்ஷனை  கொண்டிருக்கும். புதிய காரில் இடம்பெற உள்ள என்ஜின் RDE இணக்கமாகவும், E2O எரிபொருளுக்கு ஏற்றதாக இருக்கும். புதிய வெர்னாவில் டீசல் என்ஜின் இடம்பெறாது.

Hyundai Verna 2023

புதிய ஹூண்டாய் வெர்னா கார் முந்தைய மாடலை விட நீளமாகவும் அகலமாகவும் உள்ளது. புதிய கார் 4,535 மிமீ நீளம், 1,765 மிமீ அகலம் மற்றும் 1,475 மிமீ உயரம், ஆனால் உயரத்தில் எந்த மாற்றமும் இல்லை.  528 லிட்டர் பூட் ஸ்பேஸ் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெர்னா EX, S, SX மற்றும் SX (O) வகைகளில் வரும்.

2023 Hyundai Verna Features

வெர்னா காரின் முகப்பில் ஒரு பெரிய கிரில் உடன் இணைந்த பம்பர் ஒருங்கிணைந்த எல்இடி ஹெட்லைட் உடன் கூடிய எல்இடி ரன்னிங் விளக்குகளை பெற்று ஹூண்டாயின் நவீனத்துவமான வடிவமைப்பு மொழியை பின்பற்றி வந்துள்ளது.

பிரீமியம் தோற்றம் கொண்ட டயமண்ட் கட் அலாய் வீல் வடிவமைப்பு. பக்கவாட்டில் புதிய எலன்ட்ராவின் வடிவத்தை சார்ந்த ஸ்டைலிங் மற்றும் மடிப்புகள் உள்ளன. சி-பில்லர் ஒரு தனித்துவமான ஸ்டைலிங் பெறுகிறது.

புதுப்பிக்கப்பட்ட இன்டிரியர் லேஅவுட் கொடுக்கப்பட்ட அகலமான மற்றும் தாராளமான இடவசதி வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. டேஷ்போர்டு இரட்டை திரை அமைப்புடன் கொடுக்கப்பட்டு 10.2-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் தொடுதிரை மற்றும் புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டருடன் பல்வேறு வசதிகளை பெற உள்ளது. இதில் 8-ஸ்பீக்கர்களை கொண்ட போஸ் ஆடியோ சிஸ்டத்தையும் பெறுகின்றது.

பதிய வெர்னா HVAC, மற்றும் ஹீட் சீட் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான மாறக்கூடிய யூனிட் போன்ற பிரிவு-முதல் அம்சங்களையும் பெறுகிறது. UI அமைப்பினை மாற்றுகிறது மற்றும் பொத்தானை தொடும்போது கட்டுப்படுத்துகிறது. வரவிருக்கும் வெர்னா தொடர்ந்து காற்றோட்டமான முன் இருக்கைகளைப் பெற உள்ளது.

இந்திய சந்தையில் ஹூண்டாய் வெர்னா காருக்கு சவால் விடுக்கும் போட்டியாளர்களாக ஹோண்டா சிட்டி, மாருதி சியாஸ், ஃபோக்ஸ்வேகன் விர்டஸ் மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா போன்ற மாடல்கள் உள்ளன.

2023 Hyundai Verna Controls

Related Motor News

மேம்பட்ட 2025 ஹூண்டாய் வெர்னா, வெனியூ மற்றும் கிராண்ட் ஐ10 அறிமுகம்

புதிய நிறத்துடன் 2024 ஹூண்டாய் வெர்னா விலை உயர்ந்தது

ரூ.1.5 லட்சம் வரை சலுகையை வெளியிட்ட ஹூண்டாய்

ஹூண்டாய் கார்களுக்கு ரூ.2 லட்சம் வரை தீபாவளி தள்ளுபடி

ஜூன் 2023-ல் 2 % வளர்ச்சி அடைந்த ஹூண்டாய் இந்தியா

ஹூண்டாய் வெர்னா N-line சோதனை ஓட்ட படங்கள் வெளியானது

Tags: Hyundai Verna
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

carens clavis price

காரன்ஸ் கிளாவிஸ் EVல் புதிய வேரியண்டுகளை வெளியிட்ட கியா

சிறப்பு டொயோட்டா ஹைரைடர் ஏரோ எடிசன் வெளியானது

சிறப்பு டொயோட்டா ஹைரைடர் ஏரோ எடிசன் வெளியானது

மேக்னைட்டில் கூடுதலாக ஏஎம்டி ஆப்ஷனிலும் சிஎன்ஜி வெளியிட்ட நிசான்

ADAS பாதுகாப்பினை பெற்ற டாடா நெக்ஸான் விற்பனைக்கு வெளியானது

மேம்படுத்தப்பட்ட லெக்சஸ் LM 350h இந்தியாவில் அறிமுகம்

ரூ.64.90 லட்சத்தில் புதிய மினி JCW கன்ட்ரிமேன் All4 இந்தியாவில் அறிமுகம்

ஹூண்டாயின் ரூ.8 லட்சத்தில் வரவுள்ள 2026 வெனியூ படங்கள் கசிந்தது

எம்ஜி இந்தியாவின் புதிய வின்டசர் EV இன்ஸ்பையர் எடிசன் வெளியானது

கியா காரன்ஸ் கிளாவிஸில் புதிய வேரியண்டுகள் வெளியானது

புதிய நிறங்களில் 2025 சுசூகி ஜிக்ஸர், ஜிக்ஸர் SF அறிமுகமானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan