புதிய மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி காருக்கு 10,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். தற்போது இந்த காருக்கு வேரியண்ட்டை பொறுத்து காத்திருப்பு காலம் 6 வாரங்கள் வரை நீடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மஹிந்திரா மராஸ்ஸோ கார் 121 பிஎச்பி பவரை வழங்க வல்ல 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷனில் கிடைக்கிறது. ரூ.9.99 லட்சம் ஆரம்ப விலையிலிருந்து கிடைக்கிறது.

இதுகுறித்து பேசிய மஹிந்திரா அண்ட் மஹிந்திரா லிமிடெட், ஆட்டோமொபைல் துறையின் விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் தலைவர்  விஜய் நக்ரா, முன்ப்திவிலேயே வாடிக்கையாளர்களின் வரவேற்பு ஆச்சரியம் கொள்ள வைக்கிறது. வெறும் ஒரே மாதத்தில் இந்த கார்கள் மிகவும் பிரபலமடைந்து விட்டன என்றார்.

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ கார்கள், 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர் டீசல் இன்ஜின்கள், 120bhp ஆற்றல் மற்றும் இது உச்சபட்ச டார்க்யூவில் 300 Nm கொண்டதாக இருக்கும். இந்த இன்ஜின்கள் 6 ஸ்பீட் மெனுவல் கியர்களுடன் விற்பனைக்கு வந்தள்ளது. தற்போது வரை இதில் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்கள் இடம் பெறவில்லை. பெட்ரோல் கார்கள் தயாரிக்கும் பணிகளை மஹிந்திரா நிறுவனம் ஈடுபட்டுள்ளதால், இந்த பெட்ரோல் கார்கள், டிமாண்ட் அடிப்படையில், பின்னர் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.