Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

மஹிந்திரா TUV300 பிளஸ் விற்பனைக்கு வெளியானது

by automobiletamilan
June 21, 2018
in கார் செய்திகள்
0
SHARES
0
VIEWS
ShareRetweet

யுட்டிலிட்டி ரக சந்தையில் விற்பனையில் உள்ள மஹிந்திரா டியூவி300 எஸ்.யூ.வி மாடலின் அடிப்படையில் புதிதாக கூடுதல் இருக்கை மற்றும் இடவசதி பெற்ற மஹிந்திரா TUV300 பிளஸ் ரூ. 9.60 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியாகியுள்ளது. டியூவி300 பிளஸ் மூன்று விதமான மாறுபாட்டில் விற்பனைக்கு கிடைக்கின்றது.

மஹிந்திரா TUV300 பிளஸ்

true-blue SUV என்ற கோஷத்துடன் செப்டம்பர் 2015யில் வெளியான மஹிந்திரா டியூவி300 எஸ்யூவி இந்திய சந்தையில், சுமார் 80,000 மேற்பட்ட வாகனங்கள் விற்பனை ஆகியுள்ள நிலையில் தொடர்ந்து சீரான வளர்ச்சி பெற்று வரும் நிலையில் கூடுதல் இருக்கை இடவசதி பெற்று முந்தைய மாடலுடன் 405 மிமீ நீளம் அதிகரிக்கப்பட்டு 4400 மிமீ நீளத்தை பெற்று 16 அங்குல வீலை பெற்றதாக அமைந்துள்ளது.

விற்பனையில் உள்ள 4 மீட்டருக்கு குறைந்த டியூவி300 எஸ்யூவி மாடலை அடிப்படையாக கொண்டு 9 இருக்கைகளுடன் கூடிய கூடுதல் வசதி பெற்ற டியூவி300 பிளஸ் ரூபாய் 10 லட்சத்துக்கு குறைந்த விலையில் அதிக இருக்கைகள் பெற்ற மாடல்களில் ஒன்றாக திகழ்கின்றது. புதிய மாடலின் பின்புற இருக்கை அமைப்பு மற்றும் கேபினில் சிறிய அளவிலான மாற்றங்களை தனது கீழ் செயல்படும் பிரசத்தி பெற்ற இத்தாலியின் பினின்ஃபாரீனா டிசைனிங் ஸ்டூடியோ துனையுடன் மேற்கொண்டுள்ளது.

TUV300 Plus P4, P6 மற்றும் P8,  வேரியன்ட் 4400 மிமீ நீளம் கொண்டதாக அமைந்துள்ள மாடல் சாதாரண மாடலை விட 401 மிமீ கூடுதலான நீளத்தை பெற்று 1835மிமீ அகலம் மற்றும் 1821மிமீ உயரம் கொண்டுள்ள இந்த வேரியன்டில் 2,680 மிமீ வீல்பேஸ் கொண்டுள்ளது.

டியூவி 300 காரில் இடம் பெற்றுள்ள 1.5 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 100ஹெச்பி ஆற்றலுடன் 240 என்எம் டார்க் வழங்கி வரும் நிலையில், புதிதாக வந்துள்ள டியூவி300 பிளஸ் காரில் m-Hawk D120 என்ற பேட்ஜ் இடம்பெற்றுள்ளதால், இதில் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 120 ஹெச்பி ஆற்றலுடன் 280 என்எம் டார்க் வழங்குகின்ற வகையில் அமைந்துள்ளது. இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கப் பெற தொடங்கியுள்ளது.

சிறப்பான எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் நோக்கில் மைக்ரோ ஹைபிரிட் நுட்பம், பிரேக்கிங் எனெர்ஜி திரும்ப பயன்படுத்தும் வகையிலான அமைப்பு மற்றும் ஈகோ மோட் வாயிலாக அதிகப்படியான மைலேஜ் வழங்க உள்ளது.

தோற்ற அமைப்பில் பெரிய அளவில் மாற்றங்கள் இல்லாமல், பின்புறத்தில் மட்டும் நீளம் அதிகரிக்கப்பட்டு டெயில்விளக்கு புதிதாக இணைக்கப்பட்டு அதிகபட்சமாக 9 இருக்கைகள் கொண்ட காராக டியூவி 300 பிளஸ் விளங்குகின்றது. வெள்ளை, சில்வர், ஆரஞ்சு, கருப்பு மற்றும் சிவப்பு என மொத்தம் ஐந்து நிறங்களில் கிடைக்க உள்ளது. கருப்பு நிற இன்டிரியரை கொண்டுள்ள 7 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்,  ஏசி, ஹீட்டர்,  பவர் லாக வின்டோஸ் பெற்றுள்ள இந்த காரில் மூன்றாவது வரிசை இருக்கை மடிக்கும் வகையிலான பக்கவாட்டில் பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றது.

அடிப்படை பாதுகாப்பு அம்சங்களாக இரண்டு ஏர்பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ் பிரேக், அவசர பிரேக்கிங் நேரங்களில் தானாகவே ஹாசர்ட் விளக்குகள் எரிய தொட்கும் வகையில் வந்துள்ளது.

தமிழ்நாட்டில் மஹிந்திரா டியூவி300 பிளஸ் P4 ஆரம்ப வேரியன்ட் விலை ரூ. 9,60,040 (எக்ஸ்-ஷோரூம் தமிழ்நாடு)

Tags: MahindraMahindra & MahindraMahindra TUV300Mahindra TUV300 Plusமஹிந்திரா TUV300 பிளஸ்மஹிந்திரா டியூவி300 பிளஸ்
Automobile news in Tamil
  • auto
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan