Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

இந்தியாவில் நிசான் லீஃப் மின்சார கார் வருகை விபரம்

by MR.Durai
18 June 2018, 7:55 am
in Car News
0
ShareTweetSend

மிக வேகமாக மின்சாரம் சார்ந்த வாகங்களுக்கு மாறி வரும் ஆட்டோமொபைல் சந்தையில் சர்வதேச அளவில் அதிகம் விற்பனையாகின்ற நிசான் லீஃப் மின்சார கார் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

நிசான் லீஃப்

2010 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நிசான் லீஃப் எலெக்ட்ரிக் கார் உலகில் அதிகம் விற்பனையாகின்ற மின்சார கார் என்ற பெருமையை பெற்று விளங்கும் லிஃப் ஐரோப்பா சந்தையில் 10 நிமிடத்திற்கு ஒரு கார் விற்பனை ஆகின்றது.  இந்த மாடலின் இரண்டாம் தலைமுறை நிஸான் லீஃப் கடந்த வருட இறுதியில் வெளியான நிலையில் இந்திய சந்தைக்கு அறிமுகம் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டிருந்தது.

நிசான் லீஃப் பவர்ட்ரெயின்

40-kWh லித்தியம் ஐன் பேட்டரி கொண்டு இயங்கும் வகையில் பெற்றுள்ள இந்த மாடல் அதிகபட்சமாக 148 bhp பவரை வெளிப்படுத்துவதுடன் 320 Nm இழுவைத் திறனை வழங்குகின்றது.  முழுமையான ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 400 கிமீ வரை பயணிக்கும் திறன் கொண்டிருக்கின்றது.

க்விக் சார்ஜிங் வசதி பெற்றுள்ள நிசான் லீஃப் காரின் 80 சதவீத பேட்டரி சார்ஜ் ஏறுவதற்கு வெறும் 40 நிமிடங்கள் மட்டுமே போதுமானதாகும்.  முழுமையான சார்ஜ் பெறுவதற்கு  3kW உள்ள மின் திறன் பெற்றிருந்தால் 16 மணி நேரமும், 6kW உள்ள மின் திறன் பெற்றிருந்தால் 8 மணி நேரமும் போதுமானதாகும்.

நிசான் புரோபைலட் சிஸ்டம்

நிசான் லீஃப் காரில் இடம்பெற்றுள்ள மிக முக்கியமான செமி ஆட்டோமேட்டிக் அம்சமான ப்ரோபைலட் சிஸ்டம் வாயிலாக மிக எளிமையாக சிக்கலான பார்க்கிங் இடத்தில் வாகனத்தை நிறுத்த மற்றும் எடுப்பதற்கு ஏற்ற வகையில் அமைந்திருக்கும். மேலும் இந்த சிஸ்டத்தில் பொருத்தப்பட்டுள்ள 12 அல்ட்ராசோனிக் சென்சார்கள் நெடுஞ்சாலையில் தானியங்கி முறையில் இயக்க மணிக்கு 30 கிமீ முதல் 100 கிமீ வேகம் வரை தானாகவே இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த காரில் அமைந்து இ-பெடல் முறையினால் வாகனத்தின் வேகத்தை அதிகரிக்க , குறைக்க, முழுமையாக நிறுத்த ஆக்சிலரேட்டர் இ-பெடல் போதுமானதாகும். இந்த பெடலின் காரணமாக 90 சதவீத டிரைவர் வேலை மிச்சமாகும்.

இந்தியாவில் முழுமையாக வடிவமைக்கப்பட்ட (completely built unit CBU) மாடலாக இறக்குமதி செய்யப்பட உள்ள நிஸான் லீஃப் எலெக்ட்ரிக் காருக்கு இரண்டு சவாலான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது. குறிப்பாக போதுமான சார்ஜிங் நிலையங்களை கட்டமைப்பது மற்றும் சிபியூ முறையில் விற்பனை செய்யப்பட உள்ளதால் விலை ரூ. 40 லட்சம் முதல் ரூ. 50 லட்சத்துக்குள் அமைந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடு முழுவதும் கட்டமைக்கப்பட உள்ள எலெக்ட்ரிக் சார்ஜிங் நிலையங்களான மத்திய அரசின் பாரத் இவி சார்ஜர் (Bharat EV Charger) திட்டம் முழுமையாக  செயற்பாட்டுக்கு வரும்போது மின்சார கார்களின் விற்பனை மிக சிறப்பான எண்ணிக்கையை எட்டும் என கருதப்படுகின்றது

Related Motor News

2018 நிசான் லீஃப் பேட்டரி கார் அறிமுகம்

Tags: Leaf EVNissan leafNissan Motor
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

hyundai crater offroad suv concept side

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

நிசானின் மேக்னைட் விலை ரூ.32,000 வரை உயருகின்றது.!

ஹாரியர், சஃபாரியில் பெட்ரோல் என்ஜினை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan