Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

நிசான் மேக்னைட் எஸ்யூவி அறிமுக தேதி வெளியானது

by automobiletamilan
November 20, 2020
in கார் செய்திகள்

நிசான் இந்தியா நிறுவனத்தின் புத்தம் புதிய காம்பாக்ட் எஸ்யூவி காரான மேக்னைட்டிற்கு டீலர்கள் வாயிலாக முன்பதிவு துவங்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. ஒரு சில உறுதிப்படுத்தப்பட்ட தகவலின் படி டிசம்பர் 2 ஆம் தேதி விலை அறிவிக்கபட்ட உள்ளது.

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற 4 மீட்டருக்கு குறைவான நீளத்தை பெற்ற எஸ்யூவி போட்டியாளர்களான விட்டாரா பிரெஸ்ஸா, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், ஹூண்டாய் வென்யூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி 300, கியா சொனெட் மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் போன்றவற்றை எதிர்கொள்ளுகின்ற வகையில் மேக்னைட் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் இன்ஜின் மட்டும் பெற உள்ள மேக்னைட்டில் 1.0 லிட்டர் HRA0 டர்போ பெட்ரோல் என்ஜின் 100 hp பவரை 5,000rpm மற்றும் 160 Nm டார்க் 2,800-3,600 rpm-ல் (152Nm – CVT) வழங்குகின்றது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. மேனுவல் கியர்பாக்ஸ் மைலேஜ் லிட்டருக்கு 20 கிமீ எனவும், சிவிடி கியர்பாக்ஸ் கொண்ட மாடல் லிட்டருக்கு 17.7 கிமீ மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்து, பேஸ் வேரியண்டுகளில் 1.0 லிட்டர் B4D பெட்ரோல் என்ஜின் 72hp பவரை 6,250rpm-லும், 96 Nm டார்க்கினை 3,500rpm-ல் வழங்கக்கூடிய மாடலில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் உள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக லிட்டருக்கு 18.75 கிமீ மைலேஜ் வழங்குகின்றது.

சமீபத்தில் நிசான் மேக்னைட் எஸ்யூவி விலை விபரம் கசிந்ததை தொடர்ந்து, தற்போது ரூ.11,000 முதல் ரூ.25,000 கட்டணமாக செலுத்தி டீலர்கள் மூலம் முன்பதிவு மேற்கொள்ளலாம்.

மேக்னைட் XE, XL, XV Upper மற்றும் XV Premium என 4 வேரியண்டில் 20 வகையான மாறுபாடுகளில் கிடைக்கின்றது.

1.0-litre Petrol XE – ரூ. 5.50 லட்சம்

1.0-litre Petrol XL – ரூ. 6.25 லட்சம்

1.0-litre Petrol XV – ரூ. 6.75 லட்சம்

1.0-litre Petrol XV Premium – ரூ. 7.65 லட்சம்

1.0-litre Turbo Petrol XL – ரூ. 7.25 லட்சம்

1.0-litre Turbo Petrol XV – ரூ. 7.75 லட்சம்

1.0-litre Turbo Petrol XV Premium – ரூ. 8.65 லட்சம்

1.0-litre Turbo Petrol XL CVT – ரூ. 8.15 லட்சம்

1.0-litre Turbo Petrol XV CVT – ரூ. 8.65 லட்சம்

1.0-litre Turbo Petrol XV Premium CVT – ரூ. 9.55 லட்சம்

வரும் டிசம்பர் 2 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக நிசான் விலையை அறிவிக்க உள்ளது. இந்த காரின் டெக் பேக் ரூ.25,000 வரை கூடுதலாக அமைந்திருக்கலாம்.

web title : Nissan Magnite SUV bookings open

Tags: Nissan Magniteநிசான் மேக்னைட்
Previous Post

ரூ.2.48 லட்சத்தில் KTM 250 அட்வென்ச்சர் விற்பனைக்கு வெளியானது

Next Post

யமஹா எம்டி-15 பைக்கின் “கஸ்டமைஸ் யூவர் வாரியர்” அறிமுகம்

Next Post

யமஹா எம்டி-15 பைக்கின் “கஸ்டமைஸ் யூவர் வாரியர்” அறிமுகம்

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version