சமீபத்தில் EZ-shift என அழைக்கப்படுகின்ற ஏஎம்டி கியர்பாக்ஸ் பெற்ற நிசான் மேக்னைட் எஸ்யூவி அறிமுக சலுகையாக விலை ரூ.6.50 லட்சம் முதல் ரூ.8.90 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை முன்பாக நவம்பர் 11 வரை மட்டுமே கிடைக்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்பொழுது பண்டிகை காலத்தை முன்னிட்டு தீபாவளி 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேக்னைட் எஸ்யூவி கார் விலை ரூ.5.99 லட்சம் முதல் ரூ.8.90 லட்சம் வரை கிடைக்கின்றது.
Nissan Magnite EZ-Shift
சாதாரன 1.0 லிட்டர் B4D பெட்ரோல் இன்ஜின் 72hp பவரை 6,250rpm-லும், 96 Nm டார்க்கினை 3,500rpm-ல் வழங்கக்கூடிய மாடலில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் உள்ளது. தற்பொழுது இந்த என்ஜினில் 5 வேக ஏஎம்டி அல்லது EZ-Shift கியர்பாக்ஸ் வந்துள்ளது.
மேக்னைட் எஸ்யூவி காரின் ஏஎம்டி கியர்பாக்ஸ் மைலேஜ் 19.70kmpl ஆகவும், MT கியர்பாக்ஸ் பெற்ற வேரியண்ட் 19.35kmpl ஆக ARAI-சான்றளித்துள்ளது. ஏஎம்டி ஆனது XE, XL, XV, XV மற்றும் சமீபத்தில் வந்த குரோ எடிசனிலும் கிடைக்கின்றது.
NISSAN MAGNITE AMT | |
---|---|
Trim | Price |
XE | ₹ 6.50 லட்சம் |
XL | ₹ 7.44 லட்சம் |
XV | ₹ 8.21 லட்சம் |
Kuro Edition | ₹ 8.67 லட்சம் |
XV Premium | ₹ 8.90 லட்சம் |
மேலும் படிக்க – நிசான் மேக்னைட் ஆன்-ரோடு விலை