பண்டிகை காலத்தை முன்னிட்டு ரெனால்ட் இந்தியா நிறுவனம், க்விட், டிரைபர் மற்றும் கிகர் ஆகிய மூன்று மாடல்களுக்கும் ரூ.62,000 முதல் அதிகபட்சமாக ரூ.77,000 வரை சிறப்பு தீபவளி சலுகையை நவம்பர் 2023 வரை செயல்படுத்த உள்ளது.
சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட அர்பன் நைட் எடிசன் மாடலுக்கும் சிறப்பு விலை தள்ளுபடி கிடைக்க உள்ளது.
Renault Festive offers
கிகர் மற்றும் ட்ரைபர் காரில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் 100 hp பவரை 5,000rpm மற்றும் 160 Nm டார்க் 2,800-3,600 rpm-ல் (152Nm – CVT) வழங்குகின்றது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. இந்த இன்ஜினில் நார்மல், ஈக்கோ மற்றும் ஸ்போர்ட் என மூன்று விதமான டிரைவ் மோடு இடம்பெற்றிருக்கும்.
கூடுதலாக, 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 72hp பவரை 6,250rpm-லும், 96 Nm டார்க்கினை 3,500rpm-ல் வழங்கக்கூடிய மாடலில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி உள்ளது.
க்விட் காரில், 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 61hp பவரை 6, 91 Nm டார்க்கினை வழங்கக்கூடிய மாடலில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி உள்ளது.
கிகர் எஸ்யூவி மாடலுக்கு வழங்கப்படுகின்ற ரூ.77,000 வரை தள்ளுபடி வழங்குகின்றது. ரூ. 25,000 ரொக்க தள்ளுபடி, ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ், ரூ. 12,000 கார்ப்பரேட் தள்ளுபடி, ரூ. 20,000 லாயல்டி போனஸ் ஆகிய நன்மைகள் வழங்கப்படுகின்றது.
க்விட் மற்றும் ட்ரைபர் மாடலுக்கு வழங்கப்படுகின்ற ரூ.62,000 வரை தள்ளுபடி வழங்குகின்றது. ரூ. 20,000 ரொக்க தள்ளுபடி, ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ், ரூ. 12,000 கார்ப்பரேட் தள்ளுபடி, ரூ. 10,000 லாயல்டி போனஸ் ஆகிய நன்மைகள் வழங்கப்படுகின்றது.
குறிப்பிடப்பட்டுள்ள சலுகைகள் நடப்பு பண்டிகை காலத்தை முன்னிட்டு டீலர்களிடம் பல்வேறு மாறுதல்களுக்கு உட்பட சலுகைகளை நவம்பர் மாதம் மட்டும் கிடைக்கலாம். முழுமையான சலுகைகள் குறித்தான விபரங்களுக்கு அருகாமையில் உள்ள டீலரை அனுகலாம்.