ரெனால்ட் இந்தியா நிறுவனம், சோதனை செய்கின்ற ரெனால்ட் டஸ்ட்டர் எஸ்யூவி படங்கள் முதன்முறையாக எவ்விதமான முக்காடும் இல்லாமல் வெளியாகியுள்ளது. குறிப்பாக சர்வதேச அளவில் விற்பனை செய்யப்படுகின்ற இரண்டாம் தலைமுறை மாடலை ரெனோ இந்தியாவிற்கு கொண்டு வரவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
வட இந்தியாவில் சோதனை செய்யப்பட்டு வருகின்ற புதிய டஸ்ட்டர் மலையேற்ற சோதனையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றது.
புதிய ரெனால்ட் டஸ்ட்டர் எதிர்பார்ப்புகள்
சர்வதேச அளவில் விற்பனை செய்யப்படுகின்ற இரண்டாம் தலைமுறை மாடல் இந்திய சந்தையில் வெளியிடப்படவில்லை என்றாலும், குறிப்பாக தோற்ற மாற்றங்கள் உட்பட இன்டிரியரில் பல்வேறு மாற்றங்களை பெற்றதாகவும் பாதுகாப்பு சார்ந்த வசதிகளை உள்ளடக்கியதாக வரவுள்ளது.
எல்இடி ரன்னிங் விளக்குடன் கூடிய புராஜெக்டர் ஹெட்லைட், மிக நேர்த்தியான மாற்றியமைக்கப்பட்ட முன்புற கிரில், முன் மற்றும் பின்புற பம்பர்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அடுத்தபடியாக புதிய வடிவத்தைப் பெற்ற அலாய் வீல், சன்ரூஃப் அம்சங்களை கொண்டிருப்பதுடன் வரவுள்ளது. இன்டிரியரில் குறிப்பாக மேம்படுத்தப்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே உட்பட பல்வேறு கனெக்ட்டிவிட்டி அம்சங்களை பெற்றிருக்கும்.
1.5 லிட்டர் K9K டீசல் என்ஜின் பிஎஸ் 6 நடைமுறையுடன் 110 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் மாடலாக மட்டும் விற்பனை செய்யப்பட உள்ளது. 85 ஹெச்பி மாடல் கைவிடப்பட வாய்ப்புகள் உள்ளது. இந்த காரில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் பெற வாய்ப்புகள் உள்ளது.
வரும் ஜூன் 19 ஆம் தேதி எம்பிவி ரக ரெனால்ட் ட்ரைபர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதனை தொடர்ந்து இந்தியாவில் புதிய டஸ்ட்டர் மற்றும் புதிய கிவிட் கார் விற்பனைக்கு வெளியாகலாம்.
image credit : Digvijay Singh/facebook