renault triber

7 இருக்கை பெற்ற குறைந்த விலை எம்பிவி ரக மாடலான ரெனால்ட் ட்ரைபர் விற்பனை எண்ணிக்கை 20,000 இலக்கை கடந்திருப்பதுடன், ரெனால்ட் இந்தியா நிறுவனம் சென்னையில் தயாரிக்கப்பட்ட ட்ரைபர் எம்பிவி காரை தென் ஆப்பிரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ய துவங்கியுள்ளது.

ட்ரைபர் எம்பிவி ரக மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட நாள் முதலே அமோகமான வரவேற்பினை பெற்று வருகின்றது. குறிப்பாக பிரீமியம் செடான் மற்றும் காம்பாக்ட் எஸ்யூவி கார்களுக்கு இணையான விலையை விட குறைவான விலையில் ட்ரைபர் அமைந்துள்ளது.

1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போ சார்ஜ்டு விவிடி பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். அதிகபட்சமாக 72 ஹெச்பி பவர் மற்றும் 96 என்எம் டார்க் வரை வெளிப்படுத்தும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் உட்பட 5 வேக ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் என இரு விதமாக கிடைக்க உள்ளது.

ரெனோ ட்ரைபர் கார் மைலேஜ் லிட்டருக்கு 20.5 கிமீ வழங்கும் என ஆராய் அமைப்பு சான்றிதழ் வழங்கியுள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ரெனால்ட் ட்ரைபர் முதற்கட்டமாக தென் ஆப்பிரிக்காவிற்கும், படிப்படிப்பயாக ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசியா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அடுத்த ஆண்டு இந்தியாவில் கூடுதல் பவரை வெளிப்படுத்துகின்ற ட்ரைபர் டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்ட மாடலை ரெனால்ட் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.