தங்கள் வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்க முடிவு செய்த ரெனால்ட் நிறுவனம், மை ரெனால்ட் ஆப்-ஐ உருவாக்கி, ஆப்ட்டர் சேல் சர்விஸ்களை மேம்படுத்தப்பட்ட முடிவு செய்துள்ளது.
பிரான்ஸ் ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனமான ரெனால்ட் நிறுவனம் தனது மை ரெலான்ட் அப்ளிகேஷனை உருவாக்கியுள்ளது. இந்த ஆப் புதிய ரெனால்ட் காரில் இடம் இடம் பெறும். இந்த அப்ளிகேஷன்கள், ஆண்டிராய்டு மற்றும் ஐஒஎஸ் களில் இயக்கும். புதிய வாடிக்கையாளர்கள் இந்த ஆப் மூலம் பல்வேறு வசதிகை செய்து கொள்ள முடியும். இதுமட்டுமின்றி இந்த ஆப் மூலம் புதிய கார்களுக்கான டீலர்களை பற்றியும் தெரிந்து கொள்ள முடியும்.
இந்த அப்ளிகேஷனில் இடம் பெற்றுள்ள முக்கிய வசதி என்னெவென்றால், இது ரெனால்ட் டீலர் மேனேஜ்மென்ட் சிஸ்டமை கனெக்ட் செய்ய உதவுகிறது. இதன் அனைத்து வகையான பரிமாற்றங்களையும் டிராக் செய்ய முடியும். இதுமட்டுமின்றி சாலையோர அசிஸ்டென்ட், வாடிக்கையாளர் சேவை, பேமன்ட் கேட்வே, எஸ்எம்எஸ் மற்றும் வாடிக்கையாளர்களுக்கான இமெயில்களையும் பார்க்க இந்த ஆப் உதவும். இதில் உள்ள டிஜிட்டல் வாலெட் மூலம் உங்கள் காரின் ஆவணங்கள் மற்றும் யூசர் மெனுவல் பதிவு செய்து கொள்ள முடியும். மேலும் இந்த ஆப், சர்வீஸ் ரிமைன்டர் போன்ற நோட்டிபிகேஷ்ன் மற்றும் ரிமைன்டர்களையும் வழங்கும்.