Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

விரைவில்.., குறைந்த விலை ரெனால்ட் காம்பேக்ட் எஸ்யூவி விபரம்

by automobiletamilan
December 26, 2019
in கார் செய்திகள்
0
SHARES
0
VIEWS
ShareRetweet

Renault Hbc

ரெனால்ட் இந்தியா நிறுவனம், அடுத்ததாக இந்திய சதையில் குறைந்த விலை ரெனால்ட் HBC காம்பேக்ட் எஸ்யூவி மற்றும் காம்பேக்ட் செடான் ரக மாடல் ஒன்றையும் 2020 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வெளியிட திட்டமிட்டுள்ளது. முதலில் ஹெச்பிசி எனப்படுகின்ற எஸ்யூவி 2020-ன் மத்தியில் விற்பனைக்கு வெளியாக உள்ளது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட மேம்பட்ட ரெனால்ட் க்விட் மற்றும் ரெனால்ட் ட்ரைபர் இரு மாடல்களும் அபரிதமான வரவேற்பினை பெற்றுள்ள நிலையில், இந்நிறுவனம் விற்பனையில் கிடைக்கின்ற ரெனால்ட் லாட்ஜி காரை நீக்கவுள்ளதாக தெரிகின்றது. மேலும், ட்ரைபர் காரில் ஏஎம்டி கியர்பாக்ஸ் மற்றும் டர்போ பெட்ரோல் ட்ரைபர் போன்றவற்றை வெளியிடவும் உள்ளது.

குறிப்பாக, இந்நிறுவனத்தின் பிஎஸ்6 மாசு உமிழ்வுக்கு இணக்கமான மாடல்கள் ஜனவரி இறுதி வாரத்தில் கிடைக்க துவங்கும். அதனை தொடர்ந்து இந்நிறுவனம் ட்ரைபர் கார் வடிவமைக்கப்பட்ட CMF-A+ பிளாட்ஃபாரத்தில் 4 மீட்டருக்கு குறைந்த நீளத்தை பெற்ற எஸ்யூவி காரை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. இந்த மாடல் சந்தையில் கிடைக்கின்ற ஹூண்டாய் வென்யூ, விட்டாரா பிரெஸ்ஸா, எக்ஸ்யூவி 300, நெக்ஸான், ஈக்கோஸ்போர்ட் மற்றும் வரவுள்ள கியா QYI எஸ்யூவி போன்றவற்றை எதிர்கொள்ளும் திறனுடன் மற்ற மாடல்களை விட விலை குறைவாக அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

HBC என்ற குறீயிடு பெயரில் தயாரிக்கப்படுகின்ற இந்த எஸ்யூவி மாடலில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படலாம். இதில் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் இடம்பெற வாய்ப்புள்ளது. மேலும் ரெனால்ட் காம்பேக்ட் எஸ்யூவி விலை ரூ.6.50 லட்சத்தில் தொடங்க வாய்ப்புகள் உள்ளது.

ஆதாரம் – etauto

Tags: Renault
Automobile news in Tamil
  • auto
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan