Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

ரெனோ ட்ரைபர் கார் முதல் பார்வை விமர்சனம்

by automobiletamilan
August 16, 2019
in கார் செய்திகள்
0
SHARES
0
VIEWS
ShareRetweet

ரெனோ ட்ரைபர்

இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரெனோ ட்ரைபர் எம்பிவி ரக கார் மாடல் 7 இருக்கை வசதியை பெற்று அதிகப்படியான அம்சங்களை கொண்டதாக குறைந்த விலையில் விற்பனைக்கு வெளி வரவுள்ளது.

பொதுவாக இந்திய கார் சந்தையில் விலை குறைவான கார்களுக்கு அதிகப்படியான வரவேற்பு உள்ளது. இந்நிலையில் குறைவான விலை, 7 இருக்கைகள், பல்வேறு நவீன அம்சங்களை பெற்ற 8 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன், தேவைக்கேற்ப இருக்கைகள் நீக்கி கொள்வதற்கான வசதியை பெற்றுள்ளது. இந்த காரில் மூன்று சிலிண்டர் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் என இரு விதமாக கிடைக்க உள்ளது.

ரெனோ ட்ரைபர் எம்பிவி சிறப்புகள்

ரெனோ க்விட் வெற்றியை தொடர்ந்து ரெனோவின் அடுத்த மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தும் காராக எம்.பி.வி ரக ட்ரைபர் எஸ்.யூ.வி கார்களுக்கு இணையான தோற்றத்தில் விளங்க உள்ளது. இந்த மாடல் க்விட் காரின் CMF-A+ பிளாட்ஃபாரத்தினை பின்பற்றி தயாரிக்கப்பட்டுள்ளது. 4 மீட்டருக்கு குறைவாக, 3,990 மிமீ நீளம் கொண்ட இந்த காரின் வீல் பேஸ் 2,636 மிமீ கொண்டுள்ளது.

ஸ்டைலிஷான எஸ்யூவி லூக்

பிரெஞ்சு ரெனோ கார் தயாரிப்பு நிறுவனம், தனது பிரீமியம் ரக மாடல் கார்களுக்கு இணையான தோற்ற பொலிவினை வெளிப்படுத்தும் வகையில் முன்புற கிரில் மற்றும் பம்பர், மிக நேர்த்தியான ஷார்ப் எட்ஜ் பெற்ற புராஜெக்டர் ஹெட்லைட் , பகல் நேர ரன்னிங் விளக்குகள் மிகுந்த கவனத்தைப் பெறுகின்றது.

triber mpv carRenault Triber side

மேல் எழும்பி செல்கின்ற ரூஃப் லைன் பெற்ற இந்த காரின் பக்கவாட்டில் மிக நேர்த்தியான அலாய் வீல் மற்றும் சி பில்லர் இடத்தில் கொடுக்கப்பட்டுள்ள டிசைன் மிகுந்த கவனத்தை ஈர்க்கிறது. ஐரோப்பா சந்தையில் அதிகமாக கிடைக்கின்ற க்ராஸ்ஓவர் ஸ்டைல் அம்சங்கள் பெற்று விளங்கும் ட்ரைபர் காரின் நீளம் 3,990 மிமீ , அகலம் 1,739 மிமீ மற்றும் உயரம் 1,643 மிமீ ஆகும்.

இந்த காரின் கிரவுண்ட் கிளியரண்ஸ் 182 மிமீ ஆகும்.  ட்ரைபர் காரின் மொத்த எடை 947 கிலோ கிராம் ஆகும். இந்த மாடலின் டாப் வேரியண்டில் 15 அங்குல அலாய் வீல் மற்றும் பேஸ் வேரியண்டுகளில் 14 அங்குல வீல் பொருத்தப்பட்டிருக்கும்.

Renault Triber front

இந்த எம்பிவி காரின் பின்பக்க தோற்றத்தில் அமைந்துள்ள ஸ்பாய்லர் நிறுத்த விளக்கு, டெயில் விளக்கு போன்றவற்றுடன் நம்பர் பிளேட் பொருத்தும் இடம் போன்றவை சிறப்பாக வழங்கப்பட்டுள்ளது.

Renault Triber rear

 ட்ரைபரின் இன்டிரியர் வசதிகள்

ஸ்டைலிஷான க்ராஸ்ஓவர் மற்றும் மினி எஸ்யூவி கூட்டு வடிவமைப்பினை பெற்றுள்ள ட்ரைபரின் இன்டிரியர் அமைப்பிற்கு வீல் பேஸ் 2,636 மிமீ ஒதுக்கப்பட்டுள்ளது. 7 இருக்கை பெற்ற இந்த காரில் 6 கேப்டன் இருக்கை வழங்கப்பட்டுள்ளது.

டேஸ்போர்டு அமைப்பு மிக ஸ்டைலிஷாக விளங்குகின்றது. குறிப்பாக சென்ட்ரல் கன்சோலில் வழங்கப்பட்டுள்ள 8 அங்குல தொடு திரை  இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்  ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உட்பட யூஎஸ்பி வாயிலாக வீடியோ பிளே செய்யும் ஆப்ஷனை வழங்கியுள்ளது. ஓட்டுநருக்கு வழங்கப்பட்டுள்ள 3.5 அங்குல எல்சிடி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரில் ஓடோமீட்டர், ஸ்பீடோமீட்டர், எரிபொருள் அளவு, உட்பட என்ஜின் வெப்பம் போன்றவற்றை அறிந்து கொள்ளலாம்.

Renault Triber MPV

31 லிட்டர் கொள்ளளவு பெற்று இன்டிரியர் ஸ்டோரேஜ் ஆனது டேஸ்போர்டில் இரண்டு கிளோவ் பாக்ஸ், முன் இருக்கையின் மத்தியில் ஒரு கிளோவ் பாக்ஸ் என மொத்தமாக மூன்று பாக்ஸ்களையும் குளிர்விக்கும் வகையில் ஏசி காற்று செல்ல வழி வகை செய்யப்பட்டுள்ளது.

இரண்டாவது வரிசை இருக்கைக்கு ஏற்ற வகையில் ஹெட்ரூம் மற்றும் லெக் ரூம் கொண்டுள்ளது. பின்புற இருக்கை சற்று குறைவான லெக் ரூம் கொண்டதாக உள்ளது. பொதுவாக இந்த வரிசையை சிறுவர்கள் பயன்படுத்த ஏதுவாக இருக்கும்.

Renault Triber Renault Triber cluster

மூன்றாவது வரிசை இருக்கையை நமது தேவைக்கேற்ப பொருத்திக் கொள்ளவோ அல்லது நீக்குவதற்கு வழி வகை செய்யப்பட்டுள்ளது. இந்த வரிசைக்கு ஏசி வசதியும் வழங்கப்பட்டுள்ளது. மூன்று வரிசை இருக்கையும் பொருத்திருக்கின்ற நேரத்தில் காரின் லக்கேஜ் அளவு வெறும் 84 லிட்டர் கொள்ளளவு மட்டும் ஆகும். அதுவே மூன்றாவது வரிசை இருக்கையின் ஒரு இருக்கையை நீக்கினால் 320 லிட்டர் கொள்ளளவு ஸ்பேஸ், இரண்டினை நீக்கினால் அதிகபட்சமாக 625 லிட்டர் கொள்ளளவு வரை பெறலாம்.

இருக்கை பிரிவினை தவிர ரெனோ நிறுவனம், ஸ்மார்ட் கீலெஸ் என்ட்ரி, ஸ்டார்ட் ஸ்டாப் பொத்தான் மற்றும் ஆட்டோ லாக் வசதி என்பது ஓட்டுநர் சாவியை எடுத்துக் கொண்டு காரை கடந்த கொஞ்சம் தொலைவு சென்று விடும் சமயத்தில் தானாகவே வாகனம் லாக் ஆகிவிடும்.

இந்த காரின் இருக்கை அமைப்பு மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இன்டிரியரில் மிகுந்த கவனத்தைப் பெற்றதாக விளங்குகின்றது.

c15b6 renault triber 7 seats

ட்ரைபர் கார் என்ஜின்

ரெனோ சிலியோ, மற்றும் சான்டிரோ என்ற பெயரில் பல்வேறு சந்தைகளில் விற்பனை செயப்பட்டு வரும் கார்களில் இடம்பெற்றுள்ள 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போ சார்ஜ்டு விவிடி பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். அதிகபட்சமாக 72 ஹெச்பி பவர் மற்றும் 96 என்எம் டார்க் வரை வெளிப்படுத்தும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் உட்பட 5 வேக ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் என இரு விதமாக கிடைக்க உள்ளது.

ரெனோ ட்ரைபர் கார் மைலேஜ் லிட்டருக்கு 20.5 கிமீ வழங்கும் என ஆராய் அமைப்பு சான்றிதழ் வழங்கியுள்ளது.

Renault Triber

பாதுகாப்பு வசதிகள்

இந்தியாவில் அக்டோபர் 2019 முதல் நடைமுறைக்கு வரவுள்ள பாரத் கிராஷ் டெஸ்ட் விதிகளுக்கு ஏற்ற மாடலாக விளங்க உள்ள ட்ரைபரில் அடிப்படையாக அனைத்து இருக்கைகளுக்கும் சீட் பெல்ட், டூயல் முன்பக்க ஏர்பேக், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உடன் இபிடி, பார்க்கிங் சென்சார், ஸ்பீடு வார்னிங் சிஸ்டம், மற்றும் உயர் ரக மாடல்களில் ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா கொண்டதாக விளங்கும்.

இதுதவிர டாப் வேரியண்டில் அதிகபட்சமாக நான்கு ஏர்பேக்குகள் வழங்கப்பட்டிருக்கும். ஓட்டுநர் மற்றும் உடன் பயணிப்பவருக்கான ஏர்பேக் உட்பட பக்கவாட்டு ஏர்பேக் மற்றும் முன் ஏர்பேக் வழங்கப்பட்டிருக்கும்.

Renault Triber airbags

ரெனோ ட்ரைபர் கார் வாங்கலாமா ?

அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு வரவுள்ள ரெனோ ட்ரைபர் காருக்கு என நேரடியான போட்டியாளர்கள் இல்லாத நிலையில் விற்பனையில் உள்ள டட்சன் கோ பிளஸ் காரினை எதிர்கொள்ள உள்ளது.

38ec6 renault triber rear seat

வேரியன்ட் விவரம், வேரியன்ட் வாரியான வசதி விபரங்கள் முழுமையாக வெளியாகவில்லை. எனினும் இந்த காரின் விலை விற்பனையில் கிடைக்கின்ற பிரீமியம் ஹேட்ச்பேக் கார்கள் உட்பட மினி எஸ்யூவி மாடல்களுக்கு சவாலினை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கும்.

ரெனோ ட்ரைபர் விலை ரூபாய் 5.50 லட்சம் முதல் ரூபாய் 8 லட்சம் விலைக்குள் அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல் முன்பதிவு தொடங்கப்பட உள்ள நிலையில் விற்பனைக்கு ஆகஸ்ட் 28 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

 

Renault Triber Image Gallery

 

 

Tags: RenaultRenault Triberரெனோ ட்ரைபர்
Automobile news in Tamil
  • auto
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan