ரெனோ ட்ரைபர் கார்

ரூ.4,000 வரை உயர்த்தப்பட்டு 15 அங்குல ஸ்டீல் வீல் நிலையான வசதியாக ரெனோ ட்ரைபர் எம்பிவி காரின் RxZ வேரியண்ட் விற்பனைக்கு ரூ. 6.53 லட்சம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது. மற்றபடி எந்த மாற்றங்களும் இல்லை. மற்ற வேரியண்டுகளின் விலையில் எந்த மாற்றங்களும் இல்லை.

விற்பனைக்கு வெளியிடப்பட்ட இரு மாதங்களில் 10,000 க்கு அதிகமான ட்ரைபர்களை விநியோகித்துள்ள நிலையில் 7 இருக்கை கொண்ட கார் மிக சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ளது. முன்பாக 14 அங்குல ஸ்டீல் வீலுடன் 165/80 டயரினை கொண்டிருந்த இந்த வேரியண்டு தற்பொழுது 15 அங்குல ஸ்டீல் வீல் 185/65 டயரினை கொண்டதாக வந்துள்ளது. தொடர்ந்து அலாய் வீல் ஆக்செரிஸாக மட்டும் வழங்கப்படுகின்றது.

டிரைபரின் என்ஜின்

1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போ சார்ஜ்டு விவிடி பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். அதிகபட்சமாக 72 ஹெச்பி பவர் மற்றும் 96 என்எம் டார்க் வரை வெளிப்படுத்தும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் உட்பட 5 வேக ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் என இரு விதமாக கிடைக்க உள்ளது. ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட மாடல் பிறகு விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.

ரெனோ ட்ரைபரின் மைலேஜ் லிட்டருக்கு 20.5 கிமீ வழங்கும் என ஆராய் அமைப்பு சான்றிதழ் வழங்கியுள்ளது.

RxE ரூ. 4.95 லட்சம்

RxL ரூ. 5.49 லட்சம்

RxS ரூ. 5.99 லட்சம்

RxZ ரூ. 6.53 லட்சம்

மேலும் படிங்க – முழுமையான ரெனோ ட்ரைபர் சிறப்புகள்