7 சீட்டர் பெற்ற குறைவான விலை கொண்ட மாடலாக ரெனோ ட்ரைபர் எம்பிவி ரக மாடல் விலை ரூ.4.40 லட்சத்தில் தொடங்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த சில வாரங்களுக்குள் ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி காரும் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.
டட்சன் கோ பிளஸ் எம்பிவி ரக கார் மாடலின் விலை ரூ.3.97 லட்சம் முதல் ரூ. 5.94 லட்சத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்த மாடலுக்கு நேரடியான போட்டியாகவும் பிரீமியம் ஹேட்ச்பேக் மற்றும் மினி எஸ்யூவி ரக மாடல்களுக்கு சவாலாக விளங்கலாம். புராஜெக்டர் ஹெட்லேம்ப் உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளுடன் கனெக்ட்டிவிட்டி சார்ந்த வசதிகள் பெற்றதாக வந்துள்ளது.
ரெனால்ட் இந்தியா நிறுவனம், சில வாரங்களுக்கு முன்பாக சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள டிரைபர் காரில் 1.0 லிட்டர் என்ஜின் கொண்டதாக விற்பனைக்கு வெளியாக உள்ளது. 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போ சார்ஜ்டு விவிடி பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். அதிகபட்சமாக 72 ஹெச்பி பவர் மற்றும் 96 என்எம் டார்க் வரை வெளிப்படுத்தும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் உட்பட 5 வேக ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் என இரு விதமாக கிடைக்க உள்ளது.
ரெனோ ட்ரைபர் கார் மைலேஜ் லிட்டருக்கு 20.5 கிமீ வழங்கும் என ஆராய் அமைப்பு சான்றிதழ் வழங்கியுள்ளது.
கார்டாக் தளம் வெளியிட்டுள்ள செய்தி அடிப்படையில், ரெனோ ட்ரைபர் எம்பிவி ரக கார் விலை ரூ.4.40 லட்சம் முதல் ரூ.6.00 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.