கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியளவில் நடந்த சாலை விபத்து தொடர்பாக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மொத்தம் 4,61,312 விபத்துகளில் சிக்கி அதில் 1,55,781 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 4,43,366 பேர் காயம் அடைந்துள்ளனர்.
குறிப்பாக, தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 64,105 சாலை விபத்துகள் பதிவாகியும், அதனை தொடர்ந்து 54,432 விபத்துகள் மத்திய பிரதேசம் மாநிலத்தில் பதிவாகியுள்ளது.
Road Accidents in 2022
முந்தைய 2021 ஆம் ஆண்டு 4,12,432 ஆக இருந்த விபத்து எண்ணிக்கை 11.9 % அதிகரித்து 2022-ல் நடந்த மொத்த சாலை விபத்து எண்ணிக்கை 4,61,312 ஆக பதிவாகியுள்ளது. குறிப்பாக, ஒவ்வொரு மூன்று நிமிடத்திற்கு ஒரு நபர் இந்திய சாலைகளில் மட்டும் உயிரிழந்துள்ளார் என இந்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தரவுகளின் படி தெரிய வந்துள்ளது.
இறப்புகளின் அடிப்படையில், உத்தரப்பிரதேசம் 22,595 இறப்புகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது, இது மொத்த இறப்பு எண்ணிக்கையில் 13.4 சதவிகிதம், அடுத்து தமிழ்நாடு 17,884 இறப்புகளுடன், 10.6 சதவிகிதமாக உள்ளது.
மேலும் இந்த அறிக்கையின்படி, அபாயகரமான சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் வயதுக் குறைவாக உள்ள இளைய தலைமுறையினரே ஆகும்.
2022 ஆம் ஆண்டில் 18 – 45 வயதுடைய இளைஞர்கள் பாதிக்கப்பட்டவர்களில் 66.5 சதவீதம் பேர் உள்ளனர்” மேலும் “18 – 60 வயதுடைய பணிபுரியும் வயதுடையவர்கள் மொத்த சாலை விபத்து இறப்புகளில் 83.4% ஆவர்.
சாலை விபத்து இறப்புகளில் 68% கிராமப்புறங்களில் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, அதேசமயம், நாட்டின் மொத்த விபத்து இறப்புகளில் 32% நகர்ப்புறங்களில் நிகழ்ந்துள்ளன.
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, சாலை விபத்துகளின் பரவலான காரணங்கள் குறித்து அறிக்கையில், அகால மரணங்கள், காயங்கள், குறைபாடுகள் மற்றும் சாத்தியமான வருமான இழப்பு ஆகியவற்றின் அடிப்படையில்.” சாலை விபத்துக்களைத் தடுப்பது உயிர்களைக் காப்பாற்றுவது மட்டுமின்றி தேசத்தின் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் முன்னேற்றத்துக்கும் பங்களிக்கிறது என்று அவர் வலியுறுத்தினார்.