ஸ்கோடா இந்தியா நிறுவனம் பண்டிகை காலத்தை முன்னிட்டு ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி மற்றும் ஸ்கோடா சூப்பர்ப் என இரு கார்ளிலும் கூடுதல் அம்சங்களை பெற்ற கார்ப்ரேட் எடிஷனை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.
கோடியாக் எஸ்யூவி 2.37 லட்சம் ரூபாய் வரை விலை குறைக்கப்பட்டு தற்போது ரூ.32.99 லட்சம் முதலும், சூப்பர்ப் செடான் ரூ.1.80 லட்சம் வரை விலை குறைக்கப்பட்டு ரூ.25.99 லட்சத்தில் கிடைக்கின்றது. கோடியாக் கார்ப்பரேட் எடிஷனில் பிளாக், கிரே, வெள்ளை மற்றும் ப்ளூ என நான்கு நிறங்களிலும் 2.0 லிட்டர் TDI டீசல் இஞ்ஜின் 148 hp மற்றும் 340 என்எம் டார்க் வெளிப்படுத்தும் நிலையில் விற்பனைக்கு கிடைக்கும். இதில் 7 ஸ்பீட் DSG ஆட்டோ கியர்பாக்ஸ் ஆப்ஷனை பெற்றிருக்கும். கூடுதலாக ஆல்வீல் டிரைவ் சிஸ்டத்தை கொண்டிருக்கும்.
சூப்பர்ப் கார்ப்பரேட் எடிஷனில் வெள்ளை மற்றும் பிரவுன் என இரு நிறங்களிலும் 178 bhp பவர் மற்றும் 250 Nm டார்க் வெளிப்படுத்தும் 1.8 லிட்டர் பெட்ரோல் டிஎஸ்ஐ இஞ்ஜின் உடன் 7 ஸ்பீட் மேனுவல் DSG ஆட்டோ கியர்பாக்ஸ் ஆப்ஷன் மற்றும் 2.0 லிட்டர் TDI டீசல் இஞ்ஜின் 175 hp மற்றும் 350 என்எம் டார்க் வெளிப்படுத்தும் நிலையில் விற்பனைக்கு கிடைக்கும். இதில் 6 ஸ்பீட் மேனுவல் DSG ஆட்டோ கியர்பாக்ஸ் ஆப்ஷனை பெற்றிருக்கின்றது.
இரண்டு கார்களும் புதிய தலைமுறை Amundsen இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தைப் பெறுகின்றன. இதில் 8.0 இன்ச் மிதக்கும் தொடுதிரை காட்சி, அருகாமையில் சென்சார்கள் மற்றும் ஸ்மார்ட்லிங்க் தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது, மிரர்லிங்க், ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவை ஆதரிக்கிறது. கோடியாக் கார்ப்பரேட் பதிப்பு மற்றும் சூப்பர்ப் (டி.எஸ்.ஜி) கார்ப்பரேட் பதிப்பில் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ஏபிஎஸ்), எலக்ட்ரானிக் பிரேக்-ஃபோர்ஸ் டிஸ்ட்ரிபியூஷன் (EBD), ஹைட்ராலிக் பிரேக் அசிஸ்டென்ட் (HBD), ஆன்டி ஸ்லிப் ரெகுலேஷன் ( ASR), எலக்ட்ரானிக் ஸ்திரத்தன்மை கட்டுப்பாடு (ESC) போன்றவை. மேலும், கோடியாக் 9 ஏர்பேக்குகளுடன் வருகிறது, சூப்பர்ப் கார்ப்பரேட் பதிப்பில் 8 ஏர்பேக்குகள் உள்ளன.