பண்டிகை காலத்தை முன்னிட்டு ஸ்கோடா ஆட்டோ இந்திய நிறுவனம், புதிய ஸ்லாவியா மேட் எடிசன் மாடலை விற்பனைக்கு ₹ 15.52 லட்சம் முதல் ₹ 19.12 லட்சம் வரையிலான விலையில் வெளியிட்டுள்ளது.
ஸ்லாவியா மேட் எடிசனில் 115hp பவர், 150Nm டார்க் வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 வேக ஆட்டோ டார்க் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸ், 150hp பவர், 250Nm டார்க் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7-வேக DSG கியர்பாக்ஸ் உள்ளது.
Skoda Slavia Matte Edition
ஸ்லாவியா செடான் காரில் வந்துள்ள சிறப்பு எடிசன் காரில் மேட் கார்பன் ஸ்டீல் நிறத்தை கொண்டு விங் மிரர் மற்றும் கதவு கைப்பிடிகள் பளபளப்பான கருப்பு நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. கிரில், மூடுபனி விளக்கு மற்றும் பல்வேறு இடங்களில் குரோம் பூச்சூ கொடுக்கப்பட்டுள்ளது.
உட்புறத்தில் பெரிய மாற்றங்கள் இல்லாமல் தொடர்ந்து டூயல்-டோன் டாஷ்போர்டுடன் மற்ற வசதிகள் டாப் ஸ்டைல் வேரியண்டில் உள்ளதை பகிர்ந்து கொள்ளுகின்றது.
SLAVIA MATTE EDITION PRICE (EX-SHOWROOM) | |
---|---|
Variant | Price |
1.0 TSI MT Matte Edition | Rs 15.52 lakh |
1.0 TSI AT Matte Edition | Rs 16.72 lakh |
1.5 TSI MT Matte Edition | Rs 17.72 lakh |
1.5 TSI AT Matte Edition | Rs 19.12 lakh |