ரேபிட் செடானுக்கு மாற்றாக ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தின் புதிய ஸ்லாவியா காரின் அறிமுகம் 18 நவம்பர், 2021 அன்று வெளியிடப்பட உள்ளது. குஷாக் காரின் பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கபட்டுள்ள இந்த காரின் என்ஜின் உட்பட பல்வேறு அம்சங்களை பகிர்ந்து கொள்ளுகின்றது.

ஸ்லாவியா காரில் 1.0-லிட்டர் TSI மூன்று சிலிண்டர் என்ஜின் மற்றும் 1.5-லிட்டர் நான்கு-சிலிண்டர் TSI பெறுவதுடன் இரண்டும் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் மாடலாகும். 1.0 லிட்டர் என்ஜின் 113 பிஎச்பி மற்றும் 175 என்எம் டார்க்கை வழங்கும், இதில் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்ட்டருடன் இணைக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக, 1.5 லிட்டர் என்ஜின் அதிகபட்சமாக 148 bhp மற்றும் 250 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 7-ஸ்பீடு DSG ஆட்டோமேட்டிக் இணைக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஸ்கோடா ஸ்லாவியா ஷோரூம்களில் கிடைக்கும் எதிர்பார்க்கப்படுகிறது, மேலும், விலை ரூ.10 லட்சம் முதல் 16 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) எதிர்பார்க்கப்படுகின்றது. புதிய ஸ்லாவியா வரவிருக்கும் ஃபோக்ஸ்வேகன் விர்டஸ், ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா மற்றும் மாருதி சுசுகி சியாஸ் ஆகியவற்றை எதிர்கொள்ளும்.