வரும் காலங்களில் சிறிய ரக பெட்ரோல் என்ஜின் கார்கள் எலெக்ட்ரிக் கார்களாக மாறும்போது ரூ.5 லட்சத்திலிருந்து அதிகபட்சமாக ரூபாய் 12 லட்சமாக உயரக்கூடும் என மாருதி சுசுகி அறிவித்துள்ளது. இந்தியாவின் முதன்மையான கார் தயாரிப்பாளராக இந்நிறுவனம் விளங்கி வருகின்றது.
முதல் மாருதி நிறுவன எலெக்ட்ரிக் கார் மாடலாக மாருதி சுசுகி வேகன்ஆர் EV விளங்க உள்ளது. இந்த காரானது, தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் சோதனை செய்யப்பட்டு வருகின்றது.
எலெக்ட்ரிக் கார் விலை
இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் சந்தையின் வளர்ச்சி மிகவும் சவாலாகவே இருக்கும் என மாருதி வெளியிட்ட சில தகவல்களின் அடிப்படையில் முக்கிய விபரங்களை இதன் வாயிலாக வெளியாகியுள்ளது.
எலெக்ட்ரிக் கார் சந்தைக்கு தேவையான சார்ஜிங் நிலையதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் இந்தியாவில் போதுமானதாக இல்லை என குறிப்பிடுகின்றது.
தற்போது இந்தியாவில் ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் எலெக்டரிக் கார்களுக்கு 12 சதவீதம் மட்டும் வரி விதிக்கபடுகின்ற நிலையில், தற்போது சந்தையில் 5 லட்சம் விலையில் கிடைக்கின்ற பெட்ரோல் கார்கள், எலெக்ட்ரிக் வெர்ஷனில் மாறும்போது 12 லட்சமாக உயரும், மேலும் மத்திய அரசின் FAME II ஊக்கத் தொகை திட்டத்தின் கீழ் தனிநபர் வாகனங்களுக்கு வழங்கப்படவில்லை. தற்போது டாக்ஸி பயன்பாட்டிற்கான வாகனங்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வருகின்றது.
குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள மாருதி சுசுகி ஆலையில் டொயோட்டா மற்றும் சுசுகி கூட்டணியில் லித்தியம் ஐயன் பேட்டரிகள் தயாரிக்கப்பட உள்ளது. மேலும் எதிர்காலத்தில் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் வாகனங்களுக்கான ஆய்வு பனிகளிலும் இரு நிறுவனங்களும் ஈடுபட்டு வருகின்றது.