பவர்ஃபுல்லான டர்போ பெட்ரோல் இன்ஜின் பெற்று விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள அல்ட்ராஸ் iTurbo காரின் ஆரம்ப விலை ரூ. லட்சம் ஆக டாடா மோட்டார்ஸ் நிர்ணையித்துள்ளது.
பலேனோ, ஐ20 உட்பட போலோ 1.0 TSI ஆகிய டர்போ ஹேட்ச்பேக் கார்களுக்கு கடுமையான சவாலினை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள அல்ட்ராஸ் காரின் கிராஷ் டெஸ்ட் மதிப்பு 5 நட்சத்திரம் என்பது பாதுகாப்பில் மிகப்பெரும் அங்கீகாரத்தை பெற்று விளங்குகின்றது.
Altroz iTurbo இன்ஜின் மற்றும் சிறப்புகள்
முன்பாக விற்பனையில் கிடைக்கின்ற டாடாவின் நெக்சானில் இடம்பெற்றிருந்த இன்ஜின் பவர் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் சாதாரன அல்ட்ராஸ் பெட்ரோலை விட 24 BHP மற்றும் 27 Nm டார்க் கூடுதலாக வெளிப்படுத்துகின்றது.
1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் 3 சிலிண்டர் இன்ஜின் அதிகபட்சமாக 5500 ஆர்.பி.எம்-மில் 109 BHP பவர் மற்றும் 1500-5000 ஆர்.பி.எம்-மில் 140 NM வெளிப்படுத்தும். இந்த ஐ-டர்போ பெட்ரோல் என்ஜில் முதற்கட்டமாக 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. சற்று தாமதமாக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற உள்ளது.
பொதுவாக அல்ட்ரோஸின் சாதாரண பெட்ரோலில் சிட்டி மற்றும் ஈக்கோ என இரு டிரைவிங் மோட் கொடுக்ககப்பட்டிருந்த நிலையில் டர்போவில் சிட்டி மற்றும் ஸ்போர்ட்ஸ் என இரு மோடுகள் சேர்க்கப்பட்டுள்ளது.
0-100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு வெறும் 12 விநாடிகளில் எட்டிவிடும். ARAI சான்றிதழ் படி மைலேஜ் லிட்டருக்கு 18.13 கிமீ ஆக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக இணைக்கப்பட்டுள்ள XZ+ வேரியண்டில் 8 ஸ்பீக்கர்களை கொண்ட ஹார்மன் சவுண்ட் சிஸ்டம், லெதெரேட் இருக்கை, எக்ஸ்பிரஸ் கூல் வசதி மற்றும் டாடாவின் IRA (Intelligent Real time Assistant) கனெக்டேட் கார் நுட்பம் இணைக்கப்பட்டுள்ளது. 7.0 அங்குல தொடுதிரை ஹார்மன் நிறுவனம் உருவாக்கிய ConnectNext இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே வசதி, 70 வாய்ஸ் கமென்ட் English/Hinglish-ல் இம்பெற்றுள்ளது.
டாடா Altroz iTurbo விலை பட்டியல்
2021 Tata Altroz prices | |||
Variant | Petrol | iTurbo | Diesel |
XE | ரூ.5.70 லட்சம் | – | ரூ. 7.00 லட்சம் |
XM | ரூ.6.31 லட்சம் | – | ரூ.7.56 லட்சம் |
XM+ | ரூ.6.61 லட்சம் | – | – |
XT | ரூ.7.14 லட்சம் | ரூ. 7.74 லட்சம் | ரூ. 8.29 லட்சம் |
XZ | ரூ.7.71 லட்சம் | ரூ.8.46 லட்சம் | ரூ. 8.86 லட்சம் |
XZ(O) | ரூ.7.86 லட்சம் | – | ரூ.9.01 லட்சம் |
XZ+ | ரூ.8.26 லட்சம் | ரூ.8.86 லட்சம் | ரூ.9.46 லட்சம் |
(ex-showroom, Delhi)