டாட்டா மோட்டார் நிறுவனம் தனது புதிய டாட்டா ஹாரியர் கார்களுக்கான புக்கிங்கை தொடங்கியுள்ளது. இந்த காரை வாங்க விரும்புபவர்கள், 30,000 ரூபாய் ரீபண்டபுள் கட்டணத்தை செலுத்தி காரை புக்கிங் செய்து கொள்ளலாம்.
புதிய டாட்டா ஹாரியர் கார்களின் டெலிவரி வரும் 2019ம் ஆண்டின் முதல் பகுதியில் அறிமுகம் செய்யப்படும் என்றும், அந்த கார்களுக்கான டெலிவரி அறிமுகம் செய்யப்பட்ட அதே மாத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மாடல் கார்கள் 14 லட்ச முதல் 18 லட்ச ரூபாயாக இருக்கும் (எக்ஸ் ஷோரூம் விலை) என்றும் டாட்டா மோட்டார் போட்டியாளர்களை சமாளிக்கும் நோக்கில் விலை மற்றும் பேக்கேஜ்களை அறிவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கார்கள் டாட்டாவின் Omega-Arc (Optimal Modular Efficient Global Advanced Architecture) பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பிளாட்பாரம் லேண்ட் ரோவர் D8 பிளாட்பார்மை அடிப்படையாக கொண்டதாகும். இந்த Omega-Arc பிளாட்பார்மை, டாட்டா நிறுவனம் பயன்படுத்துவது இதுவே முதல் முறையாகும். இது JLR மற்றும் ரோவர் D8 கட்டமைப்பில் இருந்து பெறப்பட்டதாகும்.
டாட்டா ஹாரியர் எஸ்யூவி கார்கள் 2.0 லிட்டர் பியட் மல்டிஜெட் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் உள்ள ஆயில் பர்னர் 140bhp ஆற்றலுடன் அதிகபட்ட பீக்கில் 320Nm டார்க்யூகளுடன் வெளியாக உள்ளது. மேலும் இந்த காரின் இன்ஜின்கள் 6 ஸ்பீட் டிரான்மிஷன்களுடன் பிராண்ட் வீல் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
புதிய டாட்டா ஹாரியர் கார்கள் , ஹூண்டாய் கிரட்டா, ஜீப் காம்பஸ், மஹிந்திரா எக்ஸ்யூவி 500 கார்களுக்கு போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.