டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய நெக்ஸான் எஸ்யூவி உட்பட 4 புதிய எலக்ட்ரிக் கார்கள் என பல்வேறு மேம்பட்ட மாடல்களை விற்பனைக்கு அடுத்த ஆண்டின் இறுதிக்குள் வெளியிட உள்ளதாக டாடா தலைவர் ந. சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
அடுத்த சில காலாண்டுகளில் டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்களில் நான்கு புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்து, அதன் எலக்ட்ரிக் வாகன போர்ட்ஃபோலியோ எண்ணிக்கையை 2025-26 க்குள் 10 எண்ணிக்கையில் விற்பனை செய்ய உள்ளதாக சந்திரசேகரன் தெரிவித்தார்.
Tata Motors EV Plan
2025 ஆம் ஆண்டில் அனைத்து புதிய ஜாகுவார் EV வாகனங்களும் சாலைகளுக்கு வருவதற்கு முன்பாக, வரும் அக்டோபரில் ரேஞ்ச் ரோவர் மற்றும் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் EV எஸ்யூவி முன்பதிவு தொடங்கும் என தெரிவித்தார்.
டாடா மோட்டார்ஸ் இந்தியா மற்றும் JLR மின்சார வாகனங்களுக்கான விரிவான திட்டங்களைக் கொண்டுள்ளது. டாடா ஏற்கனவே பல தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், புதிய மேம்படுத்தப்பட்ட நெக்ஸான் எஸ்யூவி நடப்பு ஆண்டு எந்த நேரத்திலும் வெளியிடப்படும். இதுதவிர ஹாரியர், பஞ்ச் ஆகியவற்றை அறிமுகப்படுத்துவோம், பின்னர் அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் கர்வ் எஸ்யூவி அறிமுகப்படுத்துகிறோம்.
எலக்ட்ரிக் வாகன விற்பனை அதிகரித்தாலும் IC என்ஜின் வாஎனங்கள் சந்தையில் தொடர்ந்து விற்பனையில் இருக்கும், அதே நேரத்தில் மிக விரைவாக சந்தையை விட்டு நீக்க இயலாது என தெரிவித்தார்.