டாடா மோட்டார்ஸ் பஞ்ச் எஸ்யூவி மாடலுக்கு சவால் விடுக்கும் ஹூண்டாய் எக்ஸ்டர் எஸ்யூவிக்கும் இடையில் கடும் போட்டி நிலவும் நிலையில் இரு மாடல்களையும் ஒப்பீடு செய்து பல்வேறு முக்கிய விபரங்களை அறிந்து கொண்டு எந்த கார் தேர்வு செய்யலாம் என அறிந்து கொள்ளலாம்.
இரண்டு மாடல்களும் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆப்ஷனை கொண்டு பல்வேறு வசதிகள் ஒரே மாதிரியாக இருந்தாலும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட எக்ஸ்டர் 6 ஏர்பேக்குகள், டேஷ்கேம், உள்ளிட்ட வசதிகள் பிரத்தியேகமாக பெற்றுள்ளது. சிஎன்ஜி அறிமுகத்தின் போது பஞ்ச் எஸ்யூவி மாடலும் சன்ரூஃப் பெற்றுள்ளது.
Tata Punch vs Hyundai Exter
இரு மாடல்களும் மிக சிறப்பான ஸ்டைலிங் அம்சங்களை கொண்ட பாக்ஸி வடிவமைப்பினை பெற்ற எஸ்யூவி ஆக தொடக்க நிலை சந்தையில் விற்பனைக்கு கிடைக்கின்றது. பஞ்ச் மாதந்தோறும் 11,000 கூடுதலான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வரும் நிலையில், புதிதாக வந்த எக்ஸ்டர் 50,000 முன்பதிவுகளை கடந்துள்ளது.
1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 4 சிலிண்டர் கொண்ட எக்ஸ்டர் மாடல் அதிகபட்சமாக 83 hp பவர் மற்றும் 114 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
போட்டியாளரான பஞ்ச் எஸ்யூவி காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 3 சிலிண்டர் கொண்ட டாடா பஞ்ச் மாடல் அதிகபட்சமாக 86 hp பவர் மற்றும் 113 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
Hyundai Exter | Tata Punch | |
என்ஜின் | 1.2L, 4 Cyl, | 1.2L, 3Cyl |
பவர் | 83PS at 6000rpm | 86PS at 6000rpm |
டார்க் | 114Nm at 4000rpm | 113Nm at 3300rpm |
கியர்பாக்ஸ் | 5-speed/AMT | 5-speed/AMT |
மேனுவல் மைலேஜ் | 19.4 kmpl | 20.09 Kmpl |
AMT மைலேஜ் | 19.2kmpl | 18.8 kmpl |
இரு மாடல்களும் மைலேஜ் சராசரியாக 19 கிமீ முதல் 20 கிமீ வரை இந்நிறுவனங்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. நிகழ்நேரத்தில் மைலேஜ் சற்று குறைவாக கிடைக்கும்.
Punch CNG Vs Exter CNG
இரு மாடல்களும் சிஎன்ஜி பதிப்பில் சராசரியாக 27Km/kg வழங்கும் நிலையில் 1.2லிட்டர் பெட்ரோல் என்ஜினை கொண்டு சிஎன்ஜி ஆக மாற்றப்பட்டுள்ளது. குறிப்பாக சிஎன்ஜி பதிப்பை பொறுத்தவரை டாடா மோட்டார்ஸ் சிறப்பான பூட் ஸ்பேஸ் தரும் வகையில் ட்வீன் சிலிண்டர் நுட்பத்தை பயன்படுத்துகின்றது. அடுத்தப்படியாக எக்ஸ்டரில் இல்லாத மற்றொரு அம்சம் சிஎன்ஜி முறையிலே பஞ்ச் காரை ஸ்டார்ட் செய்யலாம்.
CNG | Hyundai Exter | Tata Punch |
என்ஜின் | 1.2L, 4 Cyl, | 1.2L, 3Cyl |
பவர் | 69PS at 6000rpm | 74PS at 6000rpm |
டார்க் | 95Nm at 4000rpm | 103Nm at 3250rpm |
கியர்பாக்ஸ் | 5-speed | 5-speed |
மேனுவல் மைலேஜ் | 27.10 km/kg | 26.99 km/kg |
பரிமாணங்கள் ஒப்பீடு
Hyundai Exter | Tata Punch | |
நீளம் | 3815mm | 3827mm |
அகலம் | 1710mm | 1742mm |
உயரம் | 1631mm | 1615mm |
வீல்பேஸ் | 2450mm | 2445mm |
கிரவுண்ட் கிளியரண்ஸ் | 185mm | 187mm |
பூட் ஸ்பேஸ் | 391L | 366L |
டேங்க் | 37L | 37L |
Wheel Size (Base) | 165/70 R14 | 185/70 R15 |
Wheel Size (Top) | 175/65 R15 | 195/60 R16 |
ஹூண்டாய் எக்ஸ்டர் vs டாடா பஞ்ச் விலை ஒப்பீடு
இரு மாடல்களும் ரூ.6 லட்சத்த்தில் துவங்கி டாப் வேரியண்ட் அதிகபட்சமாக ரூ.10.10 லட்சம் வரை கிடைக்கின்றது.
பஞ்ச் சிஎன்ஜி பெற்ற வேரியண்டுகள் ரூ.7.10 லட்சத்தில் துவங்கி ரூ.9.68 லட்சம் வரை கிடைக்கின்றது. எக்ஸ்டர் சிஎன்ஜி இரண்டு வேரியண்டு மட்டும் கிடைக்கும் நிலையில் ரூ.8.24 லட்சம் முதல் ரூ.8.97 லட்சம் வரை கிடைக்கும்.
Exter Vs Punch On-road Price in Tamil Nadu
எக்ஸ்டர் மற்றும் பஞ்ச் எஸ்யூவி கார்களின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை பட்டியலிடப்பட்டுள்ளது. விலை பட்டியல் அடிப்படையானதாகும், கூடுதல் ஆக்செரிஸ் சேர்க்கப்படும்பொழுது விலை மாறுபடும்.
Model | On-Road Tamil Nadu |
---|---|
Hyundai Exter | ₹ 7.13 லட்சம் – ₹ 12.44 லட்சம் |
Tata Punch | ₹ 7.10 லட்சம் – ₹ 12.43 லட்சம் |
Hyundai Exter CNG | ₹ 9.63 லட்சம் – ₹ 10.46 லட்சம் |
Tata Punch CNG | ₹ 8.30 லட்சம் – ₹ 11.28 லட்சம் |