ரூ.6 லட்சத்தில் விற்பனைக்கு வெளியிடப்பட்ட ஹூண்டாய் எக்ஸ்டர் எஸ்யூவி முன்பதிவு எண்ணிக்கை 50,000 கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட வேரியண்டுகளுக்கு அதிக வரவேற்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
பல்வேறு வசதிகள் பெற்றதாக விற்பனைக்கு வந்த ஹூண்டாய் எக்ஸ்டர் 6 ஏர்பேக்குகள், டேஸ்கேம், வயர்லெஸ் சார்ஜர் உள்ளிட்ட வசதிகளுடன் டாடா பஞ்ச் எஸ்யூவி காருக்கு கடும் சவாலினை ஏற்படுத்தியுள்ளது.
Hyundai Exter Bookings
விற்பனைக்கு வருவதற்கு முன்பே முன்பதிவு நடைபெற்று வரும் நிலையில் பட்ஜெட் விலை கொண்ட எக்ஸ்டர் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரு விதமான ஆப்ஷனை கொண்டதாக அமைந்துள்ளது.
6000rpm-ல் 81 hp பவர், மற்றும் 113.8 Nm டார்க் 4000rpm-ல் வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி என இரண்டிலும். சிஎன்ஜி ஆப்ஷனில் 6000rpm-ல் 69 hp பவர் மற்றும் 4000rpm-ல் 95.2Nm டார்க் வழங்கும். 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் வரவுள்ளது.
எக்ஸ்டரில் உள்ள 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மைலேஜ் 19.4 Kmpl (MT), 19.2 Kmpl (AMT) மற்றும் எக்ஸ்டர் சிஎன்ஜி 27.1 Km/kg ஆகும்.
மேலும் படிக்க – ஹூண்டாய் எக்ஸ்டர் எஸ்யூவி சிறப்புகள்
போட்டியாளர்களான டாடா பஞ்சு, எஸ்-பிரெஸ்ஸோ, மேக்னைட், கிகர் உள்ளிட்ட எஸ்யூவிகளுக்கு சவால் ஏற்படுத்தும் வகையில் ரூ.6 லட்சம் முதல் ரூ.10.10 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.