குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள சனந்த டாடா மோட்டார்ஸ் தொழிற்சாலையில் உற்பத்தி துவங்கப்பட்ட டாடா டியாகோ காரின் உற்பத்தி எண்ணிக்கை 3,00,000 நான்கு ஆண்டுகளில் கடந்து சாதனை படைத்துள்ளது.
முன்பாக டியாகோ டீசல் மற்றும் பெட்ரோல் விற்பனைக்கு கிடைத்து வந்த நிலையில், தற்போது டியாகோ காரில் 86 ஹெச்பி மற்றும் 113 என்எம் டார்க் வெளிப்படுத்தும். இதில் 5 வேக மேனுவல் மற்றும் 5 வேக ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கின்றது.
சில மாதங்களுக்கு முன்பாக நடைபெற்ற குளோபல் என்சிஏபி சோதனையின் மூலம் கிராஷ் டெஸ்டில் 4 நட்சத்திர மதிப்பீட்டை பெற்றுள்ளது. குறிப்பாக குழந்தைகள் பாதுகாப்பில் மூன்று நட்சத்திரங்களை கொண்டுள்ளது.
இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற ஹூண்டாய் சான்ட்ரோ, மாருதி செலிரியோ மற்றும் டட்சன் கோ போன்ற கார்களை டாடா டியாகோ எதிர்கொள்ளுகின்றது.