கடந்த 2016-2017 ஆம் நிதி ஆண்டின் இறுதி மார்ச் மாத விற்பனை முடிவில் முதல் 10 இடங்கள் பிடிக்க கார்களில் மாருதி பலேனோ கார் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. பிரபலமான டிசையர் மற்றும் ஸ்விஃப்ட் கார்களை பின்னுக்கு தள்ளியுள்ளது.

விற்பனையில் 10 கார்கள் மார்ச் 2017

  • பலேனோ காரின் விற்பனை 163.40 சதவீத கூடுதல் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
  • ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் கார்கள் பட்டியலில் பின் தங்கியுள்ளது.
  • க்விட் கார் முதல் 10 இடங்களில் 8வது இடத்தை பெற்றுள்ளது.

சுசுகி நிறுவனத்தின் குஜராத் ஆலை செயல்பட தொடங்கியதால் பலேனோ கார்களின் டெலிவரி சூடுபிடிக்க தொடங்கியுள்ளதால் கடந்த மார்ச் 2017ல் 16426 கார்கள் டெலிவரி கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 2016ல் விற்பனை செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கை 6,236 மட்டுமே இதனுடன் ஒப்பீடு செய்தால் 163.40 சதவீத கூடுதல் வளர்ச்சியை மாதந்திர விற்பனை முடிவில் பெலினோ பதிவு செய்துள்ளது.

80 ஆயிரத்துக்கு மேற்பட்ட கார்கள் முன்பதிவு செய்யப்பட்டு டெலிவரி கொடுக்கப்படாமல் உள்ளதால் காத்திருப்பு காலம் அதிகபட்சமாக 4 முதல் 6 மாதங்கள் வரை உள்ளதாக டீலர்கள் வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்விஃப்ட் மற்றும் டிஸையர் கார்களின் விற்பனை மாதந்திர சராசரிக்கு கீழாக உள்ளது. மேலும் ஹூண்டாய் நிறுவனத்தின் எலைட் ஐ20 உள்பட கிராண்ட் ஐ10 மாடல்கள் பட்டியில் உள்ளது. பிரபலமான தொடக்கநிலை மாடலாக விளங்கும் க்விட் கார் 10,296 அலகுகள் விற்பனை செய்யப்பட்டு பட்டியலில் 8வது இடத்தை பெற்று விளங்குகின்றது.

சமீபத்தில் ஹோண்டா அறிமுகம் செய்த மேம்படுத்தப்பட்ட புதிய சிட்டி கார் பட்டியலில் 10வது இடத்தை எட்டிப் பிடித்துள்ளது. முழு அட்டவனையை கீழே உள்ள படத்தில் காணலாம்…