மாருதி சுசூகி நிறுவனத்தின் பலேனோ காரினை, டொயோட்டா கிளான்ஸா (Toyota Glanza) என்ற பெயரில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த சில நாட்களுக்குள் விற்பனைக்கு வெளியிடப்பட வாய்ப்புகள் உள்ளது.

A11 OAP என்ற குறீயிட்டு பெயரில் தயாராகி வருகின்ற மாடலுக்கு கிளான்ஸா காரில் 1.2 லிட்டர் கே சீரீஸ் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.0 டியூவல்ஜெட் ஸ்மார்ட் ஹைபிரிட் பெட்ரோல் என்ஜின் என இரு பெட்ரோல் என்ஜின் கொண்டதாக விற்பனைக்கு வரவுள்ளது.

டொயோட்டா கிளான்ஸா காரின் எதிர்பார்ப்புகள்

கர்நாடாகவில் உள்ள டொயோட்டாவின் பிடாடி ஆலையில் தயாரிக்கப்பட உள்ள புதிய கிளான்ஸா கார், தற்போது சந்தையில் மாருதி சுசூகி நிறுவனம் விற்பனை செய்யகின்ற பிரபலமான பலேனோ காரின் அடிப்படையிலான பேட்ஜ் மற்றும் தோற்ற அமைப்பில் சிறிய மாறுதல்கள் கொண்டதாக விளங்க உள்ளது.

கிரில் , பேட்ஜ், இன்டிரியரில் சிறிய அளவிலான மாறுதல்களை கொண்டதாக விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள இந்த காரில் இரு பெட்ரோல் என்ஜின் இடம்பெற்றிருக்கும். பலேனோவில் உள்ள 1.2 லிட்டர் பெட்ரோல் ஹைபிரிட் என்ஜின் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என இரண்டினை பெற்றிருக்கும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் சிவிடி என இரு கியர்பாக்ஸ் கொண்டதாக வரவுள்ளது.

Toyota Glanza

மாருதியின் பலேனோ, ஹூண்டாய் ஐ20, ஹோண்டா ஜாஸ் உள்ளிட்ட மாடல்களுக்கு வாலாக விளங்க உள்ள புதிய டொயோடா கிளான்ஸா காரின் விலை ரூ. 7.80 லட்சம் முதல் ரூ.10.00 லட்சம் விலைக்குள் அமைந்திருக்கும்.

அடுத்த, டொயோட்டா விட்டாரா பிரெஸ்ஸா, டொயோட்டா எர்டிகா, டொயோட்டா சியாஸ் உட்பட சுசூகி மற்றும் டொயோட்டா கூட்டணியில் புதிய சி பிரிவு எம்பிவி மற்றும் எலக்ட்ரிக் கார்களை தயாரிக்க இரு நிறுவனங்களும் இணைந்து செயல்பட உள்ளது.