மாருதி சுசுகி பலேனோ காரினை பின்பற்றிய டொயோட்டா கிளான்ஸா ஹேட்ச்பேக் கார் இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. இரு விதமான பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் க்ளான்ஸா விற்பனைக்கு கிடைக்க தொடங்கியுள்ளது.
சமீபத்தில் பலேனோ கார் இந்தியளவில் விற்பனைக்கு வந்த 44 மாதங்களில் 6 லட்சம் விற்பனை இலக்கை கடந்துள்ளது. எனவே, பலேனோ அடிப்படையிலான கிளான்ஸா காருக்கு அமோக ஆதரவினை வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கிளான்ஸா கார் சிறப்புகள்
ஸ்மார்ட் ஹைபிரிட் மாடலை கிளான்ஸாவும் கொண்டிருக்கும், 90 ஹெச்பி பவர் மற்றும் 113 NM டார்க் புதிய 1.2 லிட்டர் என்ஜின் பெற்ற K12C பிஎஸ் 6 மாசு கட்டுப்பாடு விதிகளுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டு இரு லித்தியம் ஐயன் பேட்டரி ஆதரவை கொண்டதாக உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் G வேரியன்டில் மட்டும் பொருத்தப்பட்டு 5 மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக மட்டும் கிடைக்கும்.
க்ளான்ஸாவில் மற்றொரு பெட்ரோல் என்ஜின் 83 hp ஆற்றலை வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் டார்க் 115 NM மற்றும் இதன் மைலேஜ் லிட்டருக்கு 21.01 கிமீ ஆகும். இதில் 5 வேக மேனுவல் மற்றும் 7 வேக சிவிடி என இரண்டிலும் கிடைக்க உள்ளது.
வேரியன்ட் வாரியான க்ளான்ஸா மைலேஜ் பட்டியல் பின் வருமாறு ;-
G MT மைலேஜ் லிட்டருக்கு 23.87 கிலோமீட்டர் G CVT, V CVT வேரியண்ட் மைலேஜ் லிட்டருக்கு 19.56 கிலோமீட்டர் மற்றும் கிளான்ஸா V MT வேரியண்ட் லிட்டருக்கு 21.01 கிலோமீட்டர் ஆகும்.
பலேனோ போன்றே தோற்ற அமைப்பினை பெற்று லோகோ மாறுதல்களை மட்டும் கொண்டுள்ள இந்த காரில் இன்டிரியர் அமைப்பிலும் மாற்றங்கள் இல்லை. 7.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பெற்று ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட அம்சங்களை பெற்றுள்ளது.
டொயோட்டா கிளான்ஸா விலை பட்டியல்
G MT (90PS engine, mild hybrid): ரூ. 7.22 lakh
G CVT (83PS engine): ரூ. 8.3 லட்சம்
V MT (83PS engine): ரூ. 7.58 லட்சம்
V CVT (83PS engine): ரூ. 8.9 லட்சம்