டொயோட்டா நிறுவனம் ஹெலக்ஸ் பிளாக் எடிசன் மாடலை ரூ.37,90,000 விலையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ள பிக்கப் ரக டிரக் மாடல் மிகவும் பிரபலமான மற்றும் சாகசங்களுக்கு ஏற்ற வகையில் விளங்குகின்றது.
பிளாக் எடிசன் மாடலில் முழுமையான கருப்பு நிறத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பல்வேறு ஸ்டைலிங் எலிமெண்ட்ஸ் என அனைத்து இடங்களிலும் முழுமையான கருமை நிறத்துக்கு மாறியுள்ளது கவனிக்கத்தக்க அம்சமாக பார்க்கப்படுகின்றது. மற்றபடி, அடிப்படையான டிசைனில் எந்த மாற்றமும் கிடையாது அதே நேரத்தில் வசதிகளிலும் எந்த மாற்றமும் இல்லாமல் அமைந்திருக்கின்றது.
குறிப்பாக முன்புற ரேடியேட்டர் கிரில், 18 அங்குல கருப்பு நிற அலாய் வீல் கருப்பு நிற ஓஆர்விஎம், டோர் ஹேண்டில்ஸ், கார்னிஷ் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கருப்பு நிறம் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் எல்இடி ஹெட்லைட் மற்றும் எல்இடி ரியர் காம்பினேஷன் விளக்குகள் கொடுக்கப்பட்டிருக்கின்ற இந்த மாடலை பொருத்தவரை இன்டீரியர் அமைப்பில் தொடர்ந்து மிகவும் நவீனத்துவமான வசதிகளை கொண்டு 8 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு பல்வேறு கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்கள் பெறுவதுடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆப்பிள் கார் பிளே உள்ளிட்ட அம்சங்களை பெறுகின்றது.
ஹைலெக்ஸ் பிக் அப் ட்ரக்கில் தொடர்ந்து 2.8 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ டீசல் இன்ஜின் பயன்படுத்தப்பட்டு அதிகபட்சமாக 500NM வரை டார்க் வெளிப்படுத்துகின்றது மாடலானது மிக சிறப்பான வகையில் ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்றதாக அமைந்திருக்கின்றது 700 மில்லி மீட்டர் வரையிலான நீர் நிரம்பிய இடங்களில் பயணிக்கும் வகையிலான திறனையும் பெற்றுள்ளது 4×4 வீல் டிரைவ் ஆப்சனை கொண்டுள்ள இந்த மாடலானது அதிகபட்ச பவர் 204hp வெளிப்படுத்துகின்றது.