இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற ஹூண்டாய் கிரெட்டா மற்றும் செல்டோஸ் எஸ்யூவி கார்களுக்கு சவாலாக புதிய எஸ்யூவி காரை டொயோட்டாவின் TNGA பிளாட்பாரத்தில் உருவாக்க வாய்ப்புகள் உள்ளது. டொயோட்டா உருவாக்குகின்ற இந்த எஸ்யூவி காரை டொயோட்டாவின் பெங்களூரு ஆலையில் தயாரிக்கப்படலாம். இதே எஸ்யூவி மாடலை மாருதி சுசுகி இந்தியா நிறுவனமும் விற்பனை செய்ய உள்ளது.
மாருதியின் பலேனோ காரை கிளான்ஸா என்ற பெயரில் பெரிய அளவில் மாற்றங்கள் இல்லாமல் விற்பனை செய்யப்படுகின்ற நிலையில், ஆனால் இந்த புதிய எஸ்யூவி டொயோட்டா மற்றும் மாருதிக்கு இடையில் பெரும் அளவில் தோற்ற மாற்றங்களை பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சமீபத்தில் வெளியிடப்பட்ட டைஹட்சூ ராக்கி மற்றும் வரவுள்ள டொயோட்டா ரைஸ் எஸ்யூவி காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டாலும், இந்த காரை விட கூடுதலான நீளம் மற்றும் வசதிகளுடன் வரவுள்ளது.
இந்தியாவில் விற்பனையில் உள்ள பிரசத்தி பெற்ற ஹூண்டாய் கிரெட்டா மற்றும் புதிய வரவான கியா செல்டோஸ் போன்றவற்றை நேரடியாக எதிர்கொள்ளும் நோக்கில் இந்த புதிய எஸ்யூவி காரை கொண்டு வர இந்நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய எஸ்யூவி காரில் இடம்பெற உள்ள என்ஜின் விபரங்கள் வெளியாகவில்லை. அனேகமாக, டொயோட்டா மற்றும் மாருதி கூட்டணியில் உருவாக்கப்படுகின்ற எஸ்யூவி அடுத்த ஆண்டின் இறுதி அல்லது 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியாகலாம்.
உதவி – ஆட்டோகார் இந்தியா