டொயோட்டா அர்பன் க்ரூஸர் காரின் படம் கசிந்தது

25a6e toyota urban cruiser image leaked

டொயோட்டா-சுசுகி கூட்டணியில் அடுத்த மாடலாக இந்திய சந்தையில் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா காரின் அடிப்படையில் வரவுள்ள டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவி காரின் முதல் படம் இணையத்தில் கசிந்துள்ளது.

இந்த கூட்டணியின் முதல் மாடலாக அறிமுக செய்யப்பட்ட பலேனோ காரின் அடிப்படையிலான கிளான்ஸா கார் சீரான வரவேற்பினை பெற்று வரும் நிலையில், மாதந்தோறும் 2,500 எண்ணிக்கைக்கு கூடுதலாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. சமீபத்தில் ஐரோப்பா சந்தையில் டொயோட்டா நிறுவனத்தின் ரேவ்-4 காரின் அடிப்பையில் ஏ-கிராஸ் காரை சுசுகி வெளியிட்டுள்ளது.

இந்நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற டொயோட்டா ஃபார்ச்சூனர் காரின் முன்புற கிரில் அமைப்பினை பெற்றுள்ள அர்பன் க்ரூஸர் காரில் முன்புற பம்பர் மற்றும் பனி விளக்கு அறையும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மற்றபடி பக்கவாட்டு தோற்ற அமைப்பு, அலாய் வீல் மற்றும் பின்புறத்தில் எந்த மாற்றங்களும் இருக்காது. விட்டாரா பிரெஸ்ஸா காரின் இன்டிரியரில் எந்த மாற்றங்களும் பெரிதாக இருக்க வாய்ப்பில்லை.

1.5 லிட்டர் K சீரிஸ் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 103 ஹெச்பி பவர், 138 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் SHVS ஹைபிரிட் நுட்பத்துடன் 4 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை கொண்டுள்ளது.

அர்பன் க்ரூஸர் காரின் பெட்ரோல் மாடல் மைலேஜ் லிட்டருக்கு 17.03 கிமீ (மேனுவல்) மற்றும் ஆட்டோமேட்டிக் மாடல் 18.76 கிமீ ஆகும். இது நிகழ் நேரத்தில் இந்த காரின் மைலேஜ் லிட்டருக்கு 14 கிமீ முதல் 16 கிமீ வரை வழங்கும். மைலேஜ் விபரம் விட்டாரா பிரெஸ்ஸாவின் அடிப்படையில் இணைக்கப்பட்டுள்ளது.

டொயோட்டா அர்பன் க்ரூஸரின் ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி முதல் முன்பதிவு தொடங்கப்பட உள்ள நிலையில், விற்பனைக்கு செப்டம்பர் முதல் வாரத்தில் கிடைக்கப் பெறலாம்.

image source- autocarindia

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *