Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

அர்பன் க்ரூஸர் எஸ்யூவி காரின் வேரியண்ட் விபரத்தை வெளியிட்ட டொயோட்டா

by automobiletamilan
September 9, 2020
in கார் செய்திகள்

Toyota Urban Cruiser Front View

விட்டாரா பிரெஸ்ஸா காரின் அடிப்படையிலான டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவி மாடலில் மிட், ஹை மற்றும் பிரீமியம் என மூன்று வேரியண்டுகளை பெற்றுள்ளது. ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் என மூன்று வேரியண்டிலும் வழங்கப்பட உள்ளது.

4 மீட்டருக்கு குறைவான நீளம் பெற்ற காம்பேக்ட் ரக சந்தையில் முதல் மாடலை டொயோட்டா நிறுவனம் மாருதியின் விட்டாரா பிரெஸ்ஸா அடிப்படையிலான மாடல் விற்பனைக்கு வெளியிட உள்ளதால் எதிர்பார்ப்புள் அதிகரித்துள்ளது. காம்பேக்ட் சந்தையில் முன்னணி மாடலாக விட்டாரா பிரெஸ்ஸா விளங்குகின்றது.

1.5 லிட்டர் K சீரிஸ் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 103 ஹெச்பி பவர், 138 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் SHVS ஹைபிரிட் நுட்பத்துடன் 4 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை கொண்டுள்ளது.

அர்பன் க்ரூஸர் காரின் பெட்ரோல் மாடல் மைலேஜ் லிட்டருக்கு 17.03 கிமீ (மேனுவல்) மற்றும் ஆட்டோமேட்டிக் மாடல் 18.76 கிமீ ஆகும்.

அர்பன் க்ரூஸர் மிட் வேரியண்ட்

ஆரம்ப நிலை வேரியண்டில் எல்இடி புராஜெக்டர் ஹெட்லைட்

எல்இடி ரன்னிங் விளக்கு மற்றும் டெயில் விளக்கு

16 அங்குல ஸ்டீல் வீல்

2-டின் ஆடியோ சிஸ்டம் ப்ளூடூத் மற்றும் ஆக்ஸ் ஆதரவுடன்

ஸ்டீயரிங் மவுன்டேட் ஆடியோ கன்ட்ரோல்

கீ லெஸ் என்டரி மற்றும் கோ

ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்

அர்பன் க்ரூஸர் ஹை வேரியண்ட்

முந்தைய மிட் வேரியண்ட் வசதிகளுடன் கூடுதலாக,

16 அங்குல அலாய் வீல்

7.0 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே

க்ரூஸ் கண்ட்ரோல்

அர்பன் க்ரூஸர் பிரீமியம் வேரியண்ட்

முந்தைய ஹை வேரியண்ட் வசதிகளுடன் கூடுதலாக,

எல்இடி பனி விளக்குகள்

16 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்

ஆட்டோ டிம்மிங் ரியர் வியூ மிரர்

மழையை உணர்ந்து செயல்படும் வைப்பர்கள்

டொயோட்டாவின் ஃபார்ச்சூனர் காரில் உள்ளதை போன்ற கிரில் அமைப்பினை பெற்று பனி விளக்கு அறை மட்டும் விட்டாரா பிரெஸ்ஸா காரிலிருந்து மாறுபட்டுள்ளது. மற்றபடி, பனி விளக்குகள், எல்இடி ஹெட்லேம்ப் , எல்இடி டெயில் லைட் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் இல்லை. இன்டிரியரில் டேஸ்போர்டு மற்றும் கேபின் அமைப்பில் எந்த மாற்றமும் இல்லை. டொயோட்டா லோகோ மட்டும் இணைக்கப்பட்டு பிரெஸ்ஸாவின் கருப்பு நிற அப்ஹோல்ஸ்ட்ரிக்கு பதிலாக பிரவுன் நிறத்தை பெற்றுள்ளது.

அடுத்த சில வாரங்களுக்குள் டொயோட்டாவின் அர்பன் க்ரூஸர் விலை அறிவிக்கப்பட உள்ளது. இந்த காருக்கு போட்டியாக விட்டாரா பிரெஸ்ஸா, கியா சொனெட், வென்யூ, எக்ஸ்யூவி300 மற்றும் நெக்ஸான் போன்றவை உள்ளது.

Tags: Toyota Urban Cruiser
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version