இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகின்ற செடான் கார்களில் முன்னிலை வகிக்கின்ற மாருதி சுசூகி டிசையர் காரின் 2024 ஆம் ஆண்டிற்கான மாடல் இப்படி இருக்கலாம் என யூகத்தின் அடிப்படையில் வெளியான புகைப்படம் மற்றும் முக்கிய விபரத்தை அறிந்து கொள்ளலாம்.

2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வரவுள்ள நான்காம் தலைமுறை மாருதி ஸ்விஃப்ட் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அதனை தொடர்ந்து டிசையர் காரும் வெளியாகலாம்.

2024 Maruti Suzuki Dzire

நான்காம் தலைமுறை ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் அடிப்படையில் வரவுள்ள டிசையர் செடான் காரில் தற்பொழுதுள்ள புதிய மூன்று சிலிண்டர் Z12E பெட்ரோல் என்ஜின் பவர் மற்றும் டார்க் விபரம் முறையே 5,700rpm-ல் 82hp  மற்றும் 4,500rpm-ல் 108Nm வழங்குகின்றது. மைல்டு ஹைபிரிட் பெற  DC சிங்கோரேனஸ் மோட்டாரிலிருந்து 3.1hp மற்றும் 60Nm டார்க் வழங்குகின்றது. 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி என இரு விதமான ஆப்ஷனை பெற உள்ளது.

இந்திய சந்தைக்கு சிவிடி கியர்பாக்ஸ் மாடலுக்கு பதிலாக ஏஜிஎஸ் எனப்படும் ஏஎம்டி கியர்பாக்ஸ் வழங்கப்படலாம்.

ஜப்பானில் வெளியிடப்பட்டுள்ள ஸ்விஃப்ட் காரில் WLTP முறை மைலேஜ் சோதனையில் ஹைபிரிட் அல்லாத வேரியண்ட்  23.4kpl மற்றும் ஹைபிரிட் வேரியண்ட் 24.5kpl வெளிப்படுத்தலாம்.

தற்பொழுது டிசைன் அம்சத்தை பொறுத்தவரை, ஸ்விஃப்ட் காரின் அடிப்படையில் முன்மாதிரி படத்தில் புதிய அலாய் வீல்கள், சி-வடிவ LED டெயில் விளக்குகள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட பின்புற பம்பருடன் புதுப்பிக்கப்பட்ட டெயில்கேட் பெற்றுள்ளது.  முன்பக்கம் டிசைன் பம்பர், எல்இடி ஹெட்லைட் அம்சம் ஆனது நேரடியாக பெற்றுக் கொள்ளும்.

இன்டிரியர் அமைப்பில் டிசையர் மாடலில் புதிய டாஷ்போர்டு பெற்று 9 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பெற்று க்ரூஸ் கண்ட்ரோல், ஸ்டீயரிங் பொருத்தப்பட்ட பட்டன்கள், புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் மற்றும் ஆட்டோமேட்டிக் ஏசி பெற்றதாக அமைந்திருக்கலாம். பாதுகாப்பில் உறுதியான கட்டுமானத்துடன் எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் 6 ஏர்பேக்குகள் வழங்குவதன் மூலம் பாதுகாப்பை அதிகரிக்கலாம்.

மேலும் படிக்க – 2024 வரவுள்ள மாருதி சுசூகி எஸ்யூவி பட்டியல்

2024 ஆம் ஆண்டின் இரண்டாம் காலண்டில் மாருதி டிசையர் விற்பனைக்கு அறிமுகம் செய்ய வாய்ப்புகள் உள்ளது.

image source