Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

புதிய டிசைனுடன் வரவுள்ள 2025 ரெனால்ட் ட்ரைபர் டீசர் வெளியானது

by MR.Durai
22 July 2025, 7:13 am
in Car News
0
ShareTweetSend

ரெனால்ட் ட்ரைபர்

ஜூலை 23 ஆம் தேதி விற்பனைக்கு வரவிருக்கும் 2025 ஆம் ஆண்டிற்கான மேம்பட்ட ரெனால்ட் ட்ரைபரில் பல்வேறு டிசைன் மாற்றங்களுடன் ரெனால்டின் புதிய இன்டர்லாக்டூ டைமண்ட்  லோகோ பெற்று கிரில் அமைப்பு மாற்றப்பட்டுள்ளது.

இரண்டு வைரங்களை இன்டர்லாக்டூ முறையில் உருவாக்கப்பட்டு புதிய லோகோ கார்கள் மட்டுமல்லாமல் தன்னுடைய டீலர்களிலும் ஏற்கனவே மேம்படுத்த துவங்கியுள்ளது. 1925 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ரெனால்ட்டின் வைர லோகோ பல்வேறு புதுப்பிப்புகளுக்கு உட்பட்டுள்ளது. தற்போதைய மறுவடிவமைப்பு நவீன அம்சங்களுடன் ஒத்துப்போகும் அதே வேளையில் அடையாளம் காணக்கூடிய தன்மை மற்றும் தகவமைப்புத் தன்மையைப் பராமரிக்கும் நோக்கம் கொண்டது.

New Renault Triber

இந்திய சந்தையில் கிடைக்கின்ற 7 இருக்கை கொண்ட எம்பிவி ரக மாடலில் குறைந்த விலையில் கிடைக்கின்ற ட்ரைபரில் மேம்பட்ட டிசைன் மாற்றங்களுடன், இன்டீரியரில் உள்ள டேஸ்போர்டில் சிறிய மாற்றங்கள் மட்டுமல்லாமல் நிறங்கள் மாற்றியமைக்கப்பட்டிருக்கலாம்.

மிக முக்கியமாக தற்பொழுது சந்தையில் உள்ள பெரும்பாலான கார்களில் அடிப்படையாக 6 ஏர்பேக்குகளை பெற்று வருவதனால் ட்ரைபர் காரிலும் 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் உடன் இபிடி, இஎஸ்சி என பல்வேறு அம்சங்களை பெற்று பாரத் NCAP மையத்தினால் சோதனைக்கு ஏற்ற 5 நட்சத்திர மதிப்பீடு தரத்துக்கு இணையான கட்டுமானத்தை பெறலாம்.

1.0 லிட்டர் எனர்ஜி பெட்ரோல் என்ஜின் 72hp பவரை 6,250rpm-லும், 96 Nm டார்க் 3,500rpm-ல் வழங்கக்கூடிய மாடலில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

மேலும், கூடுதலாக தற்பொழுது மாடல் சற்று பவர் குறைவாக உள்ளதாக பலரும் உணரும் நிலையில் இந்நிறுவனத்தின் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பெறக்கூடும். அவ்வாறு பெற்றால் 100hp வரை பவர் வெளிப்படுத்தலாம். ஏற்கனவே, சிஎன்ஜி டீலர்கள் வாயிலாக பொருத்தி தரப்பட்டு வருகின்றது.

triber teased

ட்ரைபர் மூலம் இந்தியாவில் புதிய பயணத்தை துவங்க உள்ள ரெனால்ட் இந்தியா அடுத்து கிகர் எஸ்யூவி, டஸ்ட்டர், போரியல் மற்றும் க்விட் இவி ஆகியவை அடுத்த 24 மாதங்களுக்குள் சந்தையில் கிடைக்க உள்ளது.

மேலும், செப்டம்பர் 1, 2025 முதல் ரெனால்ட் இந்தியா குழுமத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக ஸ்டீபன் டெப்லைஸை ரெனால்ட் குழுமம் நியமித்துள்ளது. தனது புதிய பதவியில், இந்திய சந்தையில் குழுவின் உத்தியை வடிவமைத்து செயல்படுத்துவதற்கு டெப்லைஸ் பொறுப்பேற்பார் என தெரிவித்துள்ளது. தற்பொழுது இவர் கொரியாவின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார்.

Related Motor News

2022க்கு முந்தைய ரெனால்ட் வாகனங்கள் E20 பெட்ரோலுக்கு ஏற்றதல்ல.!

7 இருக்கை 2025 ரெனால்ட் ட்ரைபர் சிறப்புகள் மற்றும் விலை பட்டியல்

ரெனால்ட்டின் புதிய 2025 ட்ரைபரின் விலை மற்றும் மாற்றங்கள்.!

ரெனால்ட் 2025 ட்ரைபர் எம்பிவி எதிர்பார்ப்புகள் என்ன?

அடுத்தடுத்து வரப்போகும் ஹைபிரிட் கார்கள் மற்றும் எஸ்யூவிகள்.!

ரெனால்ட் கார்களின் விலையை 2% வரை ஏப்ரல் 1, 2025 முதல் உயருகின்றது

Tags: RenaultRenault Triber
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

Maruti Suzuki suv teased victoris

செப்டம்பர் 3ல் மாருதியின் எஸ்யூவி விற்பனைக்கு வெளியாகிறது

kwid cng

புதிய ரெனால்ட் க்விட் என்னென்ன மாற்றங்கள் பெறலாம்.?

இந்தியாவில் வின்ஃபாஸ்ட் மின்சார கார்கள் செப்டம்பர் 6ல் அறிமுகம்

நவீன வசதிகளுடன் வருமா., 2025 மஹிந்திரா தார் எதிர்பார்ப்புகள்.!

புதிய ரெனால்ட் கிகர் ஆன்-ரோடு விலை மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள்

2025 ரெனால்ட் கிகர் எஸ்யூவி விலை மற்றும் முக்கிய மாற்றங்கள்

பிரீமியம் வசதிகளுடன் வரவுள்ள பாசால்ட் X டீசரை வெளியிட்ட சிட்ரோயன்

எக்ஸ்டர் புரோ பேக்கினை வெளியிட்ட ஹூண்டாய்

BE 6 பேட்மேன் எடிசனை 999 ஆக உயர்த்திய மஹிந்திரா

2026 ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி என்ன எதிர்பார்க்கலாம்.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan