2021 ஆம் ஆண்டு இந்திய சந்தையில் புதிய எலக்ட்ரிக் கார் மற்றும் பைக் அறிமுக எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ள நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்படுகின்ற சில பேட்டரி கார்களை பற்றி இங்கே அறிந்து கொள்ளலாம்.
தற்போது இந்திய சந்தையில் டாடா நெக்ஸான் இவி, எம்ஜி இசட்எஸ் இவி மற்றும் ஹூண்டாய் கோனா போன்ற மாடல்கள் தனிநபர் சந்தையிலும் வர்த்தக ரீதியான பயன்பாட்டில் டிகோர் இவி, வெரிட்டோ போன்றவை அமோகமான ஆதரவினை பெற்றுள்ளது. அடுத்து பிரீமியம் எஸ்யூவி சந்தையில் மெர்சிடிஸ்-பென்ஸ் EQC விற்பனையில் உள்ளது.
1. மஹிந்திரா இகேயூவி100
2020 ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டு ரூ.8.25 லட்சமாக விலை அறிவிக்கப்பட்டு மிகவும் எதிர்பார்க்கப்படுகின்ற மஹிந்திரா இகேயூவி 100 எஸ்யூவி 40 கிலோவாட் லித்தியம் ஐயன் பேட்டரி மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் கொண்டு 53 ஹெச்பி பவர் மற்றும் 120 என்எம் டார்க் வெளிப்படுத்தலாம். சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 147 கிமீ தொலைவு வரை செல்லும் திறன் கொண்டதாக விளங்குகின்றது. 80 சதவீத சாரஜ் ஏறுவதற்கு சுமார் 60 நிமிடங்களை மட்டும் எடுத்துக் கொள்ள வழிவகுக்கும் விரைவு சார்ஜிங் வசதி வழங்கப்படலாம்.
இந்த இகேயூவி எஸ்யூவி காரினை அடுத்த மூன்று மாதங்களுக்குள் சந்தையில் கிடைக்க உள்ளது.
2.டாடா அல்ட்ராஸ் இவி
முன்பே இந்நிறுனத்தின் நெக்ஸான் இவி, டிகோர் இவி வெற்றி பெற்றுள்ள நிலையில், 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வந்த அல்ட்ராஸ் இவி காரில் இந்நிறுவனத்தின் ஜிப்ட்ரான் விபரத்தின் படி குறைந்தபட்ச ரேஞ்ச் 250 கிமீ – 300 கிமீ என தொடங்குவதுடன் மிக வேகமாக சார்ஜிங் செய்வதற்கான விரைவு சார்ஜிங் வசதி ஆப்ஷன் பெற்றிருக்கும். உறுதியான நுட்ப விபரங்கள் வெளியாகவில்லை.
அல்ட்ராஸ் இவி காரின் அறிமுகம் 2021 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டுக்குள் விற்பனைக்கு வெளியிடப்படலாம்.
3. மஹிந்திரா எக்ஸ்யூவி 300 எலக்ட்ரிக்
டாடா நெக்ஸான் இவி காருக்கு நேரடியான போட்டியை ஏற்படுத்த உள்ள மஹிந்திரா எக்ஸ்யூவி 300 எலக்ட்ரிக் இந்திய சந்தையில் மிகவும் எதிர்பார்க்கப்படுகின்ற ஒரு எலக்ட்ரிக் காராகும். எக்ஸ்யூவி 300 இ.வி மாடலில் 40 கிலோவாட் பேட்டரி பேக் கொண்டதாக எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 300 கிமீ வரை வரம்பை வழங்கக்கூடும். காம்பாக்ட் எஸ்யூவிக்கு மின்சார மோட்டார் சுமார் 130 ஹெச்பி உற்பத்தி செய்யும்.
2021 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் எக்ஸ்யூவி 300 எலக்ட்ரிக் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
4. மாருதி வேகன் ஆர் இவி
இந்தியாவில் பல மாதங்களாக சோதனை செய்யப்பட்டு வருகின்ற வேகன் ஆர் இவி அறிமுகம் மிகவும் குறைந்த விலையில் எதிர்பார்க்கப்படுகின்றது. 130 கிமீ ரேஞ்சு பெற்றதாக வரவுள்ளது.
2020 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்ய மாருதி திட்டமிட்டிருந்த நிலையில் போதிய மின்சார சார்ஜிங் கட்டமைப்பு இல்லாத காரணத்தால் 2021 ஆம் ஆண்டில் வெளியிட உள்ளதாக குறிப்பிட்டிருந்தது.
5. ஆடி e-Tron
பிரீமியம் சந்தையில் எதிர்பார்க்கப்படுகின்ற ஆடி இ-ட்ரான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில் சக்திவாய்ந்த 95 kWh லித்தியம் ஐயன் பேட்டரி பொருத்தப்பட்டு விரைவு சார்ஜர் மூலம் 0-80 சதவீதம் வெறும் 30 நிமிடத்திலும், சாதாரண சார்ஜர் மூலம் 10 மணி நேரம் எடுத்துக் கொள்ளும். இரண்டு எலக்ட்ரிக் மோட்டார் பயன்படுத்தப்பட்டு ஒட்டுமொத்த பவர் 412 PS மற்றும் 664 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது.
அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜில் 400 கிமீ பயணிக்கும் திறனுடன் ஆடி இ-ட்ரான் விலை ரூ.1.50 கோடியில் துவங்கலாம்.
6. வால்வோ XC40 ரீசார்ஜ்
வால்வோ நிறுவனத்தின் தொடக்கநிலை எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலான XC40 ரீசார்ஜ் காரில் நான்கு சக்கர டிரைவ் பெற்று இரண்டு 201 ஹெச்பி எலக்ட்ரிக் மோட்டாரில், ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஆக்சிலில் பொருத்தப்பட்டுள்ளன. அவை இணைந்து அதிகபட்சமாக 402 ஹெச்பி பவர் மற்றும் 660 என்எம் டார்க்கை வழங்குகின்றன. இந்த கார் 0-100 கிமீ வேகத்தை அடைய 4.9 விநாடிகள் தேவைப்படுகின்றது. அதிகபட்சமாக 180 கிமீ வேகத்தில் பயணிக்கும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
7. ஜாகுவார் ஐ-பேஸ்
இந்திய ஜாகுவார் இணையதளத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள ஐ-பேஸ் எஸ்யூவி காருக்கு முன்பதிவு துவங்கப்பட்டுள்ள நிலையில், விற்பனைக்கு 2021 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் வெளியிடப்பட உள்ளது.
90kWh லித்தியம் அயன் பேட்டரி மற்றும் இரண்டு மின்சார மோட்டார் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 400 ஹெச்பி பவரை, 696 Nm டார்க் உருவாக்குகிறது. 0-100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 4.8 விநாடிகள் எடுத்துக் கொள்ளும். பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு 100kW ரேபிட் சார்ஜரில் 0-80 சதவீதம் எட்டுவதற்கு 45 நிமிடங்களும், 7Kw ஏசி வால் சார்ஜரில் 10 மணி நேரம் ஆகும். முழுமையான சிங்கிள் சார்ஜில் 470 கிமீ கிடைக்கும் என WLTP மதிப்பிட்டுள்ளது.
8. போர்ஷே டைகூன்
இந்த ஆண்டில் இந்தியாவில் எதிர்பார்க்கப்பட்ட போர்ஷே ஸ்போர்ட்டிவ் எலக்ட்ரிக் டைகூன் 2021 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
டேகேன் காரில் இரு மின்சார மோட்டார்கள் (முன்புறம் மற்றும் பின்புற ஆக்சில்) 616 ஹெச்பி குதிரைத்திறன் வங்குவதுடன் , ஆனால் இதை ‘ஓவர் பூஸ்ட் பவர்’ அம்சத்தால் டர்போவில் 500 கிலோவாட் (சுமார் 680 குதிரைத்திறன்) வழங்குவதுடன் 3 வினாடிகளில் 0-100 கி.மீ வேகத்தில் செல்ல முடியும் மற்றும் டர்போ எஸ் வேரியண்டில் அதிகபட்சமாக 560 கிலோவாட் (சுமார் 760 குதிரைத்திறன்) 2.8 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தை எட்டும் திறன் கொண்டது.
93.4 கிலோ வாட் ஹவர் லித்தியம் ஐயன் பேட்டரி பொருத்தப்பட்டு டர்போ வேரியண்டை பொறுத்தவரை 381 கிமீ – 450 கிமீ ரேஞ்சு வழங்குவதுடன், டாப் டர்போ எஸ் வேரியண்ட் 370 கிமீ வரை வழங்கும் என WLTP சோதனை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9. டெஸ்லா
இந்தியாவில் மிக நீண்ட எதிர்பார்ப்புகளில் ஒன்றான டெஸ்லா எலக்ட்ரிக் கார்கள் 2021 ஆம் ஆண்டின் இறுதி அல்லது 2022 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.