Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

120 கிமீ ரேஞ்சு.., ரூ.9 லட்சத்தில் மஹிந்திரா eKUV 100 எலக்ட்ரிக் கார் வருகையா..

by automobiletamilan
January 9, 2020
in Auto Expo 2023, கார் செய்திகள்

mahindra ekuv100

மஹிந்திரா எலக்ட்ரிக் கார்கள் தயாரிப்பாளரின், மினி எஸ்யூவி மாடலான கேயூவி 100 அடிப்படையில் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட மஹிந்திரா eKUV 100 எலக்ட்ரிக் கார் ரூ. 9 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்படும் என மஹிந்திரா சிஇஒ பவன் குன்கா உறுதிப்படுத்தியுள்ளார்.

வரும் 2020 ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் மஹிந்திராவின் எலக்ட்ரிக் கேயூவி 100 காரின் நுட்பவிபரங்கள் மற்றும் விற்பனைக்கு வெளியாகின்ற தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், ஏப்ரல் முதல் ஜூன் 2020க்குள் விற்பனைக்கு வெளியிடுவதுடன் இந்த எலக்ட்ரிக் காரின் எக்ஸ்ஷோரூம் ஆரம்ப விலை ரூ. 9 லட்சத்தில் தொடங்கும் என மஹிந்திரா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் பவன் குன்கா எக்னாமிக்ஸ் ஆட்டோ இதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

விற்பனையில் கிடைத்து வருகின்ற ஐசி என்ஜின் பெற்ற கேயூவி 100 காரிலிருந்து மாறுபட்ட வடிவமைப்பை முன்புற கிரில் மற்றும் பம்பர் பகுதியில் பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. முன்பாக 2018 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட இ கேயூவி 100 எஸ்யூவி காரில் குறிப்பிட்டபடி, 40 கிலோவாட் லித்தியம் ஐயன் பேட்டரி மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் கொண்டு 53 ஹெச்பி பவர் மற்றும் 120 என்எம் டார்க் வெளிப்படுத்தலாம். சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 120 கிமீ – 140 கிமீ தொலைவு வரை செல்லும் திறன் கொண்டதாக விளங்கும். 80 சதவீத சாரஜ் ஏறுவதற்கு சுமார் 60 நிமிடங்களை மட்டும் எடுத்துக் கொள்ள வழிவகுக்கும் விரைவு சார்ஜிங் வசதி வழங்கப்படலாம்.

இதுதவிர, இந்நிறுவனம் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் எலக்ட்ரிக் குவாட்ரிசைக்கிள் ரக மஹிந்திரா Atom உட்பட பல்வேறு எலக்ட்ரிக் கான்செப்ட் மாடல்களை காட்சிப்படுத்த வாய்ப்புள்ளது.

Tags: Mahindra eKUV100மஹிந்திரா eKUV100
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version