வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி பத்திரிக்கையாளர் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ள ஸ்கோடா இந்தியா நிறுவனம், தனது காம்பேக்ட் எஸ்யூவி மற்றும் முதல் எலக்ட்ரிக என்யாக் iV அறிமுகம் குறித்து முக்கிய தகவல்களை பகிர்ந்து கொள்ள வாய்ப்புள்ளது.
இந்திய சந்தையில் கிடைக்கின்ற 4 மீட்டருக்கு குறைந்த நீளம் பெற்ற காம்பேக்ட் எஸ்யூவி மாடல்களான டாடா நெக்ஸான், பிரெஸ்ஸா, வெனியூ, சொனெட்XUV300, கிகர், மற்றும் மேக்னைட் ஆகியவற்றை நேரடியாக எதிர்கொள்ளும் வகையில் தனது மாடலை 4 மீட்டருக்கு குறைந்த நீளம் உள்ள காம்பேக்ட் மாடலாக வெளியிட திட்டமிட்டுள்ளது.
5 இருக்கை பெற்ற ஸ்கோடா காம்பேக்ட் எஸ்யூவி முக்கிய விபரம் ;-
- MQB-A0 (IN) பிளாட்ஃபாரத்தில் மிகவும் உறுதியான கட்டுமானத்தை கொண்டதாக வரவுள்ளது.
- 4 மீட்டருக்கு குறைந்த நீளம் பெற்ற காம்பேக்ட் எஸ்யூவி காரில் 110hp, 178 Nm டார்க் உற்பத்தி செய்கின்ற 1.0 லிட்டர் TSI மூன்று சிலிண்டர் என்ஜின் பெற வாய்ப்புள்ளது.
- இந்த மாடலில் 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற வாய்ப்புள்ளது.
- அடிப்படையான பாதுகாப்பு அம்சங்களான ESC, ஏபிஎஸ் உடன் இபிடி 6 ஏர்பேக்குகள் கொண்டு ADAS பாதுகாப்பு தொகுப்பினை பெற வாய்ப்புள்ளது.
மிதக்கும் வகையிலான தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், ஆட்டோ க்ளைமேட் கன்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜிங், சன்ரூஃப் மற்றும் முன்பக்கத்தில் காற்றோட்டமான இருக்கைகள் உட்பட பலவற்றை எதிர்பார்க்கலாம்.